×

புதுமுறிப்பு இடம் பெயர்ந்தோர் செல்விச்சு – 30 ஆகஸ்ட் 2008

புதுமுறிப்பு இடம் பெயர்ந்தோர் செல்விச்சு – 30 ஆகஸ்ட் 2008

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் மன்னாரில் ஆரம்பித்துத் தொடர்ந்த மக்கள் இடப்பெயர்வு ஆகஸ்ட் 2008 இல் நெருக்கடி நிலையை அடைந்தது. அச் சமயம் வன்னியிலிருந்து அண்மையில் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 150,000 வரை எட்டிவிட்டிருந்தது. ஆகஸ்ட் 2008 இல் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்பில், இடம் பெயர்ந்த மக்கள் தொகை மிக நெரிசலாகக் காணப்பட்டது. மன்னார்  மாவட்டத்தின்  பரப்புக்கடந்தான்  கிராமத்திலிருந்த மூன்று இளங்குடும்பத்தினர் ஆகஸ்ட் 2007 அளவில் இடம்பெயர ஆரம்பித்திருந்தனர். முதலில் மன்னாரிலுள்ள கள்ளியடிக்கும், பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவிலுள்ள பாலியாற்றுக்கும் அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவிலுக்கும் அதன் பின்னர் அதே மாவட்டத்தின் வன்னேரிக்குளத்துக்கும் இக் குடும்பத்தினர் இடம் பெயர்ந்திருந்தனர். அவர்கள் மீதான ஷெல் தாக்குதல் இடம் பெறுவதற்கு பத்து நாட்களின் முன்பதாகவே அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புதுமுறிப்புக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

30  ஆகஸ்ட் அன்று சிறீலங்கா  இராணுவம், இந்த மூன்று குடும்பங்களும் ஒரு காணியில் அமைத்திருந்த மூன்று இருப்பிடங்களின் மத்தியில் ஷெல்களை வீசியது. இதன் விளைவாக, இன்னமும் பெயரிடப்படாத   ஒரு  மாதக் குழந்தை, மேலும் ஒரு குழந்தை   உட்பட, இந்த மூன்று குடும்பங்களையும் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர். இப் படுகொலைகளின்  தாக்கம் இந்த இளம் பெற்றோரையும் குழந்தைகளையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. விசுவநாதன் திலகேஸ், 35
  2. கருப்பையா ஆனந்தராசா,  28
  3. ஆனந்தராசா கௌதம்,  02
  4. குழந்தை, 0

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments