
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் 24 வயது இராசசேகர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் 24 வயது இராசசேகர் பாமகவைச் சேர்ந்த இவர் ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி வேதனைப்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராசசேகர் கூறியிருக்கின்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். ஆனால், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.
வீரவணக்கம்.