×

சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகியின் உரை ‘புலிகளின் குரல்’ வழியே நிகழ்ந்தது.

சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகியின் உரை ‘புலிகளின் குரல்’ வழியே நிகழ்ந்தது.

மே 15 புலிகளின் இறுதி நிலைப்பாட்டை தத்துவார்த்தத் தளத்தில் முரசறையும் குரலாக சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகியின் உரை ‘புலிகளின் குரல்’ வழியே நிகழ்ந்தது.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை ‘அடிபணிவு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று பிற்பாடு மே 17 அறிவித்தாலும் அதன் கொள்கை உரையாக – தத்துவார்த்த உரையை யோகி அண்ணையே நிகழ்த்தினார். சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் இறுதியாகப் பேசும் போது ‘தலைவர் ஒரு தொகுதிப் போராளிகளுடன் நந்திக்கடல் களப்பில் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டிய செய்தியைத் தெளிவாகச் சொல்வார்’ என்ற தகவலும், அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் ‘சரணடைவு’ என்ற சொல்லை அழுத்தமாகப் பேச மறுத்ததும் பிற்காலத்தில் வலுச் சேர்த்தாலும் தலைவரின் இறுதி நேரச் சிந்தனை ‘நந்திக்கடல் கோட்பாடுகளாக’ எழுதப்பட உந்துதலாகவும், ஒரு பொறியாகவும் இருந்தது யோகி அண்ணையின் இந்த உரைதான்.

அதன் சிறு பகுதி கீழே:

-இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்தபின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக சிங்கள தேசம் தீர்வு குறித்துப் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாரும் இதைப்பற்றி இனிப் பேச மாட்டார்கள்.

-ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலகநாடுகள் எல்லாமே இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடவேண்டும் என நினைக்கின்றன. குறிப்பாக, தேசியத் தலைவரை அழித்துவிட வேண்டுமென நினைக்கின்றன. அவரை அழித்துவிட்டால், இந்தப் போராட்டத்தில் தாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும், எங்களை அழித்து, எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்து, தாங்கள் விரும்பியதைச் செய்யமுடியும் என நினைக்கின்றன.
அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்தப் போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

-எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லோரும் – ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர – எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகெங்கும் இருக்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேசவேண்டும். உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துக்களைச் சொல்லிவைப்போம். அதன்மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.

– நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒருகாலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தை தான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம்.

– தமிழீழ எழுச்சி மாதம்
– நந்திக்கடல் கோட்பாடுகள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments