
சாம்பல்தோட்டம் படுகொலை – 1984
வவுனியா நகரின் மன்னார் ரோட்டிலிருந்து மூன்றுகி.மி.ல் உளள்து, சாம்பல்தோட்டம் கிராமம். இன்று இவ்விடம், நாவலர் பாணி என்று அழைக்கப்படுகிறது.
1984 திம்பு பேச்சு வார்த்தைக்கு முன்னர் இங்கு நடைபெற்ற படுகொலையைப் பற்றி அவ்வுரை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருமங்கை கூறியாது, ‘ஒரு திருமண நிகழ்ச்சி முடிவுற்று தனியாருக்கு சொந்தமான ஒரு பேருந்திருந்தில் 70 தமிழர்கள் திரும்பிக் கொண்டிருநத்னர். அப்பேருந்தை பம்மைமேடு என்ற இடத்தில் சிங்கள இராணுவம் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த அனைவரையும் தேக்கவத்தை என்ற இடத்திலுள்ள தேக்கு மரத்தோப்புக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பெண்களையும், குழந்தைகளையும் தனியே பிரித்து அழைத்துச் சென்றனர். மீதமிருந்த ஆண்களை தேக்குமரத்தைப் பார்ககச் சொல்லிவிட்டு, தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்முடித்தனமாய் சுட்டு தள்ளினார்கள்.
சிங்கள இராணுவம், அங்கு குண்டடிபட்டுகிடந்த உடல்களை பூட்ஸ் காலால் உதைத்து புரட்டிப்பார்தது, எவரேனும் உயிருடன் இருக்கின்றனரா, என சோதனையிடட்னர். அங்கு ஏவராவது வலியால் புலம்பும் சப்தம் கேட்டால், திரும்பவும் அவர்கள் சாகும்வரை சுட்டனர். ஆரம்பத்தில் துப்பாக்கியால் சுட்டபோது, ஒருவர் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டதால், அவருக்கு குண்டு எதுவும் பாயவில்லை.
ஆனால் குண்டடிபட்ட வேறு நபர்கள் இருவர் இவர் மீது இரத்த வெள்ளத்தில் விழுந்தனர். இதனால், மயக்கமுற்றிருந்தவர் உடல் மீது இரத்தம் படிந்தது. இராணுவத்தினர் மயக்கமுற்றிருந்தவரை உதைத்த போது, அவர் ஏதும் சப்தம் எழுப்பாததினால், மயக்கமுற்றவரும் இறந்திருப்பார் என எண்ணி சென்று விட்டனர்.
இராணுவம் அங்கிருந்து சென்றது தெரிந்தவுடன், எழுந்து அருகில் உளள் தாலம்பொக்கணை என்ற கிராமத்திற்கு ஒடினார். அக்கிராமத்தில் தமிழர்களின் நண்பராகவும் விடுதலைப்புலி ஆதரவாளராகவும் ஒரு இஸ்லாமிய தலைவர் ஒருவர் இருந்தார். அந்த தலைவர் ஒரு கடை வைத்திருந்தார். தப்பிவந்த தமிழர், நடைபெற்ற சம்பவம் குறித்து அந்த இஸ்லாமிய தலைவரிடம் சொல்லிவிட்டு, அக்கிராமத்திலிருந்த காவல்துறைக்கு சொல்லபயந்து யாழ்பாணதிற்கு சென்றுவிட்டார்.
இஸ்லாமியரும் கிராம மக்களும் படுகொலை நடந்த இடத்திற்கு சென்று பார்ததனர், செய்தி காட்டுத் தீயாய் பரவியது. தப்பி வந்த அந்த தமிழருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு பாதுகாப்பாய் அனுப்பிவைகக்ப்பட்டார். நாங்கள் படுகொலை நிகழ்ந்த இடத்திற்கு சென்றுபார்ததோம். எங்கள் இருப்பிடம் அருகிலேயே இது நடந்துளள்து. படுகொலை நடந்த இடத்தில் பெண்களின் உடல்கள் காண முடியவில்லை. அப்பெண்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதும், அவர்களின் கதி என்ன என்பதும் தெரியவில்லை என தப்பி வந்தவர் கூறினார்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.