
காகிதமற்ற அகதியிலிருந்து – செங்காளன் மானில தலைவர்
38 ஆண்டுகளுக்கு முன், எந்த ஆவணங்களும் இல்லாமல், சொந்த நாடான இலங்கையை விட்டு உயிரைக் காப்பாற்ற சுவிட்சர்லாந்துக்கு வந்தவர் ஜெயகுமார் துரைராஜா. அந்நாளில் அவர் ஒரு அகதி. இன்று – அவர் செங்காளன் மானிலத்தின் மிக உயர்ந்த பதவியை ஏற்க தயாராக இருக்கும் நகரத் தலைவர்.
இந்தப் பயணம் எளிதானதல்ல. மொழி தெரியாது. வேலை இல்லை. எதிர்காலம் தெளிவில்லை.ஆனால் நம்பிக்கை இருந்தது. உழைப்பு இருந்தது. விடாமுயற்சி இருந்தது. பாத்திரம் கழுவும் வேலை முதல் மருத்துவமனையில் செவிலியராக, அங்கிருந்து சமூக சேவை, அரசியல் ஈடுபாடு வரை – ஒவ்வொரு கட்டமும் அர்ப்பணிப்பின் சாட்சி.
ஜெர்மன் மொழியை இரவு வகுப்புகளில் கற்றவர், இன்று அரசியல் மேடையில் குரல் கொடுக்கிறார்.
’“செங்காளன் என் வீடு”
இந்த வார்த்தைகள் ஒரு உணர்வு.
ஒரு அடையாளம். ஒரு வெற்றி.
![]()