
சிலாவத்துறை படுகொலை – 02 செப்ரெம்பர் 2007
2007இல் சிறீலங்கா இராணுவத்தினரின் மன்னார் மீதான வலிந்த தாக்குதலின் விளைவாக சிலாவத்துறையைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த 13 குடிமக்களை ஏற்றிக்கொண்டு வான் ஒன்று சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் 2007 செப்ரெம்பர் 02ஆம் நாள் இடம்பெற்றது. இராணுவத்தின் மத்தியில் எற்பட்ட இம்மோதலின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலம் இரண்டு நாட்களாக அகற்றப்படவில்லை. பழுதடைந்த உடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவால் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒரு தந்தை, தாய், 04 வயது மகனும் உள்ளடங்குவார்கள்.
இதிலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் செப்ரெம்பர் 26ஆம் நாள் வணபிதா நீக்கிலாப்பிள்ளை பாக்கியரஞ்சித் இவ்வாறானதொரு கிளைமோர்த்தாக்குதலில் இதற்கு அருகாமையிலுள்ள இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். அவர் அப்பொழுது தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உணவு விநியோகம் செயது; கொண்டிருந்தார். இதில் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()