×

கண்டிப்பான தன்மை என்பது இராணுவக் கட்டுப்பாட்டின் ஓர் இயல்புத் தன்மையே.

கண்டிப்பான தன்மை என்பது இராணுவக் கட்டுப்பாட்டின் ஓர் இயல்புத் தன்மையே.

எந்த நாட்டிலானாலும் சரி இராணுவக் கட்டுப்பாட்டுக்கென்று சில தனித் தன்மைகள் உண்டு. கம்யூனிச நாடாகட்டும், சனநாயக நாடாகட்டும் இராணுவக் கட்டுப்பாடு எந்த இடத்திலும் தனி இயல்பு கொண்டதாகவே இருக்கும். எந்த இராணுவத்தின் நடவடிக்கையையும் கவனியுங்கள். விளைவுகளைப் பற்றி கவலைப்படுவதில் அல்ல, வெற்றியை அடைவதிலேயே அது கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

இராணுவ நடவடிக்கைகளில் “வெற்றியே” எல்லாவற்றையும் விட முக்கியமானது. இன்னொன்று, நாம் மக்களுக்காக போராடும், மக்களின் நம்பிக்கைக்குரிய போராளிகள். எம்மை மதிப்பாய்வு செய்கிறவர்கள் எதிரிகளோடு மோதும் எங்கள் இரக்கமற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார்கள். “இரக்கமற்ற தன்மையையே” வடிவமாகக் கொண்ட எதிரிகளோடுதான் நாம் மோதுகிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். நாங்கள் அவர்களை அன்போடு அணுக முடியுமென்று நினைக்கிறீர்களா? முடியாது, இதுதான் உண்மை. ஆனால் உண்மையில் நடைமுறையில் நாங்கள் அறப்பண்பும், ஒழுங்குணர்வும் அமைந்தவர்களாகவே இருக்கிறோம். நல்ல கட்டுப்பாட்டில் நம்பிக்கை உள்ள தலைமை ஆசிரியரின் கீழ் கட்டுப்பாடுகள் மிக்க ஒரு பள்ளிக்கூடம் இருக்குமானால் அடைவார்கள்.

ஆசிரியரும், குறிப்பாக தலைமை ஆசிரியரும் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில பள்ளிக்கூடங்கள், முதல் தரப் பள்ளிக்கூடங்களாய் மக்களால் கணிக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அப்படிப்பட்ட தலைமை ஆசிரியருக்குக் கீழே பயின்று, ஒவ்வொரு ஆண்டும் வரிசை வரிசையாக வெளியேறும் மாணவர்கள் பிற்காலத்தில் சிறப்புடன் வாழ்க்கை நடத்துவதையும் கண்டிருப்பீர்கள். எங்கள் நிலையிலும் இந்த உவமை பொருந்தும். இதனால்தான் நாங்கள் கட்டுப்பாட்டிற்கு முதலிடம் தருகிறோம்.

– மேதகு தேசியத்தலைவர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments