×

சுதந்திரபுரம் படுகொலை – 10 யூன் 1998

சுதந்திரபுரம் படுகொலை – 10 யூன் 1998

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சுதந்திரபுரம் கிராமம், உடையார்கட்டுச் சந்தியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அண்ணளவாக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். இக்கிராமத்தில் ஆரம்பகாலங்களில் குடித்தொகை குறைவாகக் காணப்பட்ட போதும்  ஏனைய  பிரதேசங்களிருந்து  காலத்துக்குக்  காலம்  இராணுவ  நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்கள் 1996ஆம் ஆண்டினைத் தொடர்ந்து கூடுதலாக இப்பிரதேசத்தில் வசித்துவந்தனர்.

10.06.1998  அன்று காலை 9.15 மணி தொடக்கம்  11.30   மணிவரை  ஆனையிறவு, அம்பகாமம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த    இராணுவத்தினரும் விமானப் படையினரும் இணைந்து இப் பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதலையும்,    விமானத் தாக்குதலையும்   நடத்தினார்கள்.   மக்கள் எதிர்பார்த்திராத சந்தர்ப்பத்தில்  இத்தாக்குதல் இடமபெற்றதனால் மக்களால் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியவில்லை. தாக்குதலுக்கு உட்பட்ட பகுதியானது புகைமண்டலமாக மாறியதுடன், எங்கும் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணமிருந்தன. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு ஏனையவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றும் நோக்குடன் ஓடி ஒளித்துக்கொண்டார்கள். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இங்குள்ள மக்கள் ஈடுபட்டனர்.

நடைபெற்ற தாக்குதலில் முப்பதிற்கும்     மேற்பட்ட  பொதுமக்கள்  உயிரிழந்ததுடன், ஐம்பதிற்கும்      மேற்பட்டோர்     காயமடைந்தனர். மக்களின்   பல   இலட்சம்   ரூபா பெறுமதியான சொத்துகள் அழிந்தன.  பத்து வீடுகள்     முற்றாக   அழிக்கப்பட்டன.  நூறு  வீடுகள் சேதமடைந்தன. பயன்தரு தென்னை மரங்கள் அழிந்ததால் கிராமத்தின் அழகும், அமைப்பும் சீர்குலைந்து போயிற்று.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. இராஜகோபாலன் ரவிச்சந்திரன்  விவசாயம்  28
  2. இராமு இரட்ணலிங்கம் தொழிலாளி 26
  3. இராசலிங்கம் உதயகுமார்  தொழிலாளி  39
  4. இரத்தினசிங்கம் இராணிமலர்  –  28
  5. நவக்குமார் கோகிலா – 30
  6. நவராசா கிருஸ்ணமூர்த்தி தொழிலாளி 25
  7. கந்தையா குணசேகரம் – 24
  8. புஸ்பநாதன் சதீஸ் மாணவன்  10
  9. புஸ்பநாதன் கலைச்செல்வி குழந்தை  5
  10. புஸ்பநாதன் தேவநந்தினி குழந்தை 2
  11. புஸ்பநாதன் சத்தியசீலன் மாணவன்  8
  12. புஸ்பநாதன் ரமேஸ்குமார் மாணவன் 13
  13. பழனிவேல் திருச்செல்வி மாணவி 18
  14. மனுவல் தேவதாஸ்  –  45
  15. முத்துத்தம்பி வசந்தகுமாரி  –  19
  16. முத்துவேல் ஞானசேகரம்  –  59
  17. அமிர்தலிங்கம் சுதா – –
  18. ஆசிர்வாதம் பாத்திமா மாணவி 17
  19. அற்புதம் ஜெகன் – 23
  20. ஜேபன் – –
  21. பொன்னன் சுரேஸ்குமார் – –
  22. செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்  மாணவன்  21
  23. செல்வராசா சிறிதரன் வீட்டுப்பணி 21
  24. வெள்ளையப்பன் சுப்பையா விவசாயம் 57
  25. சாட்செறோன் கொண்செட்டா வீட்டுப்பணி 26
  26. சாணக்குட்டி யோகபாலசிங்கம் தனியார்தொழில் 27
  27. சின்னத்துரை – –
  28. சின்னத்துரை சுதாகரன் தனியார்தொழில் 20
  29. சிதம்பரப்பிள்ளை குமாரவேல்  –  48
  30. விநாயகமூர்த்தி தேவகரன் தனியார்தொழில் 22
  31. விக்கினேஸ்வரன் நேசராணி – 40
  32. வல்லிபுரம் ராணிமலர் வீட்டுப்பணி 27
  33. றிச்சாட் செறோன்கொன்சென்றர் – 26

இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)

  1. இராமலிங்கம்சர்மா – 48
  2. நயிநாமுகமது முகமதுநவூம்  –  31
  3. நாதன் – 38
  4. நாராயணன் சத்தியசீலன் தொழிலாளி 18
  5. நிசாம் – 30
  6. க.ஜீவநந்தினி –  21
  7. க.மாலினி – –
  8. கந்தையா சுப்பிரமணியம் விவசாயம் 22
  9. கதிர்வேலு நாகதேவன் விவசாயம் 34
  10. கதிரேசு ஜெபனேஸ்வரன்  –  18
  11. குமாரநாயகம் மேகநாதன் சுயதொழில் 24
  12. குமரேசன் – 30
  13. கணேஸ் மாலினி – 34
  14. கணேஸ் றேகன் – 24
  15. கி.வக்சலா – 28
  16. கிருஸ்ணன் ரவிக்குமார் கூலித்தொழில் 26
  17. கிறிஸ்ரி வட்சலா – 28
  18. ப.ஜெயரட்ணம் –  21
  19. ப.சீலன் – 17
  20. புஸ்பராசா சுதன் – 20
  21. பாலு மாணிக்கம் – 64
  22. பத்மராசா – 21
  23. பிரசாந்தினி மாணவன் 15
  24. ஐ.செல்வம் –  27
  25. ஐயம்பிள்ளை செல்வன்  –  26
  26. வை.லட்சுமி –  63
  27. வையாபுரி இலட்சுமி  –  63
  28. தியாகராசா சந்திரலிங்கம் – 42
  29. மாணிக்கம் – 64
  30. முத்துக்கறுப்பன் கதிர்காமத்தம்பி  –  65
  31. முத்துலிங்கம் பத்மராசா – 22
  32. அ.விஜயகுமார் மாணவன் 14
  33. அந்தோணிப்பிள்ளை சிவகுமார்  மாணவன்  7
  34. அப்புப்பிள்ளை கறுப்பையா விவசாயம் 65
  35. அப்புப்பிள்ளை சின்னக்கறுப்பன் விவசாயம் 65
  36. ஆறுமுகம் மீனாம்பிகை – 28
  37. ஜெயகாந்தன் –  20
  38. ஜெயச்சந்திரன் மாணவன்  15
  39. ஜேசுநாயகம் சில்வஸ்டர் கூலித்தொழில் 26
  40. கே.தாரணி – 21
  41. கோமலட்சுமி – 18
  42. கோவிந்தன் – 56
  43. பொன்னன் பழனியாண்டி சுயதொழில் 60
  44. பொன்னுத்துரை ரவிச்சந்திரன் – 29
  45. சொக்கலிங்கம் சுப்பம்மா வீட்டுப்பணி 60
  46. சொர்ணலட்சுமி – 18
  47. சோளநாதன் இந்திரகுமார் – 23
  48. சௌந்தராஜன் சசிகரன்  மாணவர்  16
  49. செல்வநாயகம் சாந்தகுமாரி சுயதொழில் 20
  50. செல்லத்துரை சற்குணநாதன்  –  41
  51. செல்லத்தம்பி குமரேசன் – 30
  52. ச.சகுந்தலா – 26
  53. சந்திரலிங்கம் – 42
  54. சுதர்சன் – 25
  55. சின்னக்கறுப்பையா –  62
  56. சிவநாதன் ருக்குமணிதேவி வீட்டுப்பணி 23
  57. சிவனேசன் – 18
  58. சிவஞானம் ஜெயச்சந்திரன் மாணவன் 15
  59. சிவராசா ஞானசேகரலிங்கம் – 40
  60. சிறிகுமார் மதிவதனா மாணவி 14
  61. சுவிந்திரன் – 21
  62. விஜயகுமார் டெய்சிராணி – 33
  63. ரஞ்சன் மலர்விழி – –
  64. ரஞ்சன் வின்சன் குழந்தை 5

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments