×

மோரியர்களுக்கு முன்பாக பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு நன்னர்

மோரியர்களுக்கு முன்பாக பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு நன்னர்

மோரியர்களுக்கு முன்பாக பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு நன்னர் எனும் தமிழ் வேளிர்கள் மகதத்தை ஆண்டுவந்தனர். இந்த ‘நன்னர்’ என்போர்தான் இந்தியாவிலேயே முதன்முதலாக ஓர் பேரரசை நிறுவிய தமிழ் வேளிர்களாகும்.இவர்களைத்தான் பாகதத்திலும் சமற்கிருதத்திலும் ‘நந்தர்’ எனத் திரித்து ஒலித்தனர். இந்த நன்னர்கள் எனும் வேளிர்களோடு பல குறுநில வேள் அரசுகள் இணைந்த முதற் பேரராக இருந்த காலத்தில் இமயம் முதல் குமரிவரை பழந்தமிழகமாகவே விளங்கியது.

அந்த பேரரசர்களுடைய கூட்டணியில் தமிழக மூவேந்தர்களும் இடம்பெற்றிருந்தனர். இது கி.மு 10 நூற்றாண்டு முதல் காணப்பட்டது. இந்நிலையில் கி.மு 4 இல் கிரேக்க மசிடோனிய பேரரசர் அலெக்சான்டருடைய படையெடுப்பு பழந்தமிழகமாக திகழ்ந்த இந்திய வடமேற்கு எல்லையில் இடம்பெற்றது. அதனை முறியடித்து வெற்றிவாகை சூடியவன் தமிழக இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய படைகள் .அப்போரில் விழுப்புண் அடைந்த அலெக்சாண்டர் தாயகம் திரும்பும் வழியில் பாபிலோனில் இறந்துவிட சிறைபிடித்த யவன் கைதிகளை இழுத்து வந்த இமயவரம்பன் அவர்களுடைய படையினர் வசமிருந்த பெரும் செல்வங்களை கைப்பற்றி தனது வெற்றியில் பங்கேற்ற படைகளுக்கும், புலவர்களுக்கும் வழங்கி மிகுதியை நிலம் தின்னுமாறு தனது கோநகராக விளங்கிய மாந்தையில் விடுத்தான்.

அக்கால பகுதியில்தான் கொடிய காடுகளும் மலைகளும் விலங்குகளும் மண்டிக் கிடந்த மகதத்தின் இருண்ட நடுப்பகுதியில் வடுகர் எனும் அநாகரிகர்கள் வாழ்ந்துவந்தனர். அவ் வடுகர்கள் இந்த நன்னர்களின் கூலிப்படையினர் ஆக இருந்தனர்; காலப்போக்கில் அந்த வடுகர்கள் நன்னர்களை வஞ்சகமாய் வீழ்த்திவிட்டுக் கீழைக்கங்கைக்கரையில் ‘மோரிய அரசு’ எனும் முதல் வடுக அரசைத் தோற்றுவித்தனர். அம் மோரிய அரசு வீழ்ந்ததையடுத்து அதே வடுகர்கள் கருநாடகத்திலிருக்கும் பல்லாரிப் பகுதியில் சதவாகன்னர (நூற்றுவர் கன்னர்) அரசைத் தோற்றுவித்தனர்.

இச் சதவாகன்னர்கள் தமிழ் மூவேந்தர்களுக்குக் கீழடங்கி ஆண்டுவந்தனர். அவர்களின் வழிவந்த வடுகர்கள்தாம் களப்பாளர்களாகவும் பல்லவர்களாகவும் சளுக்கியர்களாகவும் திரிந்தனர்; தமிழகத்தின்மேல் படையெடுத்து வென்று தமிழர்நாட்டைச் சூறையாடவும் ஆளவும் வல்லவராயிரனர்.

அவ் வடுகர்களின் பிறங்கடைகளே விசயநகரத்து நாயக்கர்களாகவும் பாளையக்காரர்களாகவும் மராத்தியராகவும் படையெடுத்து வந்து தமிழரை வென்று அடக்கியாண்டனர். இன்றும் அவர்களுடைய ஆட்சி தூய தமிழ் பெயர்களை சூடிக்கொண்டும் , தமிழ் குடி களின் அடையாளமாக உள்ள சாதியமைப்பை போர்த்திக் கொண்டும் தமிழர் உரிமைகளை சுரண்டி சனநாயக முலாம் பூசிக்கொண்டு மக்களாட்சி என்ற போர்வையில் தமிழகத்தில் தொடர்கிறது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments