
தமிழர்களும் சோனகர்களும்
முன்பு ஒரு காலத்தில், தமிழர் மற்றும் சோனகரிடையே மதம் கடந்த ஒரு பிணைப்பு இருந்தது. தமிழர் திருமணங்களில் சோனகரும், சோனகர் திருமணங்களில் தமிழர்களும் கலந்துகொண்டு உறவை வளர்த்தார்கள். பண்டிகை காலங்களில் உணவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தார்கள்.
1980-களுக்கு முன்பு வரை இவர்களிடையே மிக நெருக்கமான உறவு இருந்தது.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும் நம்மவரே ”
இந்த முழக்கத்தின் அடிப்படையில் சோனக இளைஞர்களும் போராளி இயக்கங்களில் தங்களை இணைத்துச் சிறிலங்காப் படைகளுக்கெதிராகப் போராட ஆரம்பித்தார்கள்.
“தமிழ்க் கரந்தடிப் (கொரில்லா) போராளிகளை கட்டுப்படுத்த இசுரவேலின் அனுபவம் வாய்ந்த உள்நாட்டு பாதுகாப்பு சேவையோடு இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்றார் 1984 இல் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி.
இங்கிருந்துதான் ஈழத்தில் தமிழர்களுக்கும் தமிழ் கதைக்கும் சோனகருக்குமா பிணக்கு ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
ஏற்கனவே மொசாட்டின் வழிகாட்டலில் தமிழர்களையும் சோனகரையும் பித்தாளுவதற்கு ஸ்ரீலங்கா அரசு போட்டு வைத்திருந்த திட்டத்தின் படி, கிழக்கை கட்டுப்படுத்த உருவாக்கி வைத்திருந்த சிறப்பு அதிரடிப்படை (STF) யை வைத்து மிக நேர்த்தியாக இரு பிரிவினருக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த சிறிய சிறிய பிணக்குகளை ஆரம்பித்து வைத்தனர். இதற்குத் தமிழ் மற்றும் சோனக ஒற்றுமையை விரும்பாத சோனகர் தரப்பும் உதவியது.
இதன் தொடர்ச்சியாக இசுரவேலின் உள்நாட்டு பாதுகாப்பு சேவை Shin Bet, STF க்கு தலைமை தாங்கி பயிற்சிகள் வழங்கியது.
அடுத்த கட்டமாக சிங்கள ஊர்காவல் படையை உருவாக்கி மிக நுட்பமாக இசுலாமிய இளைஞர்களை உள்வாங்கி பயிற்சி வழங்கி STF ஓடு இணைந்து பணியாற்றச் செய்து கிழக்கில் தமிழ்க் கிராமப் படுகொகளைகளை நிகழ்த்தினார்கள்.
சிறிய அளவிலிருந்த பிணக்குகள் பெரும் விரிசலாக மாறியது. தொடர் விரிசல் காரணமாக சோனகர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக “ஜிகாத்” என்ற ஆயுத அமைப்பை உருவாக்கினர். அதற்கும் இதே இ-Shin Bet தான் தொலைத்தொடர்பு சாதனங்கள், பயிற்சிகள், திட்டங்கள் என அனைத்தையும் வழங்கியது.
#வரலாறு