×

தெல்லிப்பளை ஆலயம் படுகொலை – 30 மே 1992 யாழ்ப்பாணத்தில்

தெல்லிப்பளை ஆலயம் படுகொலை – 30 மே 1992 யாழ்ப்பாணத்தில்

வலிகாமத்தின் பகுதியிலுள்ள தெல்லிப்பளைப் பிரதேசத்தில் வடக்குப் துர்க்காபுரம் எனும் கிராமம் அமைந்துளள்து. இங்கு வரலாற்றுப் புகழ்மிக்க பல ஆண்டுகள் பழமைவாய்ந்த தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பலாலி இராணுவத்தள விரிவாக்கத்திற்காக பலாலி முகாமை அண்மித்த பகுதிகள் மீது எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல் நடத்தியவாறு விரிவாக்கினார்கள். இவ்விராணுவ நடவடிக்கைக்கு அஞ்சிய வசாவிளான், குரும்பசிட்டி, தையிட்டி, மயிலிட்டிப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்தார்கள். இவர்களில் பல குடும்பங்கள் அகதிகளாக தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்ததுடன், ஆலயத்தில் வெள்ளைக்கொடியையும் பறக்கவிட்டனர்.

30.05.1992 நண்பகல் 12மணியளவில் விமானப்படையின் இரண்டு ‘அவ்வரோ  விமானங்கள் மக்கள் தங்கியிருந்த ஆலயம் மீது ஐந்திற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்தனர். பத்திற்கும் அதிகமானோர் பலத்த காயங்களுக்கு உள்ளேர்கள். ஆலயத்தின் கோபுரம், பொங்கல் மண்டபம் ,வசந்த மண்டபம், ஆலயசுற்றாடலிலுள்ள வீடுகளெனப் பல கடட்டங்கள் பலத்த சேதத்திற்குள்ளானது.

மீண்டும் இராணுவத்தினர் 1993ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஆலய வருடாந்த மகோட்சவ காலப்பகுதியில் சப்பறத் திருவிழா அன்று, பக்தர்கள் கூடியிருந்தவேளை சிறீலங்கா இராணுவத்தினர் முன்னேறிப் பலாலிப் படைமுகாமை காலை 10.00 மணியளவில் ஆலயப்பகுதி நோக்கி பலாலியிலிருந்து எறிகணை வீச்சினை நடத்தினர். அதேநேரம் விமானப் படை விமானத்தாக்குதலை நடாத்தியது.

இத்தாக்குதல்களில் ஒரு பக்தரும், துர்க்கா புரம் மகளிர் இல்லத்தில் தங்கியிருந்த யுவதி, அருகிலுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்த ஆசிரியர்களென ஐந்து பேர் உயிரிழந்தார்கள். ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலயப்பகுதி மீண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளேனது. அன்றைய தினம் பலாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சினால் ஆலய அன்னதான மண்டபத்தில் சமையலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. இராசதுரை மனோகரன் சுருட்டு வேலை 28
02. ஜயம்பிள்ளை  மகேந்திரன் கூலி 31
03. கந்தையா இளையதம்பி ஓய்வூதியர் 65
04. பத்மநாதன் மயூரன் மாணவன் 22
05. வைத்தியலிங்கம் வசீகரா வர்ணம் பூசுபவர் 23
06. செல்லத்துரை செல்வகாந்தராசா – 32
07. வேலாயுதம் நந்தகுமார் மாணவன் 11
08. வேலாயுதம் வினோதகுமார் குழந்தை 1
09. சுப்பிரமணியம் கனகராணி விற்பனையாளர் 38
10. சின்னக்குட்டி காசிப்பிள்ளை கமம் 71

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments