×

தட்சனாமடு படுகொலை – 29 ஜனவரி 2008

தட்சனாமடு படுகொலை – 29 ஜனவரி 2008

மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மடு கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் புனித யாத்திரைத் தலமாகவும் விளங்குகின்ற மடுத்தேவாலயம் அமைந்துள்ளது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இனமத வேறுபாடின்றி மக்கள் வந்து தரிசிக்கின்ற ஒரு புனித தலமாகவே மடுத்திருப்பதி விளங்குகின்றது.

இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் மடுத்திருப்பதிக்கு தொண்டு செய்வதிலே பெரிதும் அக்கறை கொண்டவர்கள். இங்கு வசிக்கின்றவர்களில் அதிகமானோர், 1990ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடம் எனக் கருதி மடுத்திருப்பதியில் தஞ்சம் புகுந்தவர்களாவர்.

2007 நவம்பர் 13ஆம் நாள் மடுத்தேவாலய வளாகம் மீது சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைவீச்சில் 05 வயதுச் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் வயோதிபப் பெண்  ஒருவர்  படுகாயமடைந்தார்.  இதன்  காரணமாக  மக்கள்,  அச்சமடைந்து  பெரியமடு, கூராய், கள்ளியடி, இலுப்பக்கடவை, ஜெயபுரம் போன்ற இடங்களுக்குச் சென்ற பின்னர் அங்கு 50 குடும்பங்கள் அளவிலேயே வசித்துவந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக்கப்பட்டுள்ள யுத்தம் காரணமாக திருப்பதி வளாகத்திலுள்ள சிறார்கள் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தட்சணாமருதமடுவில் இயங்கிவந்த சின்னப்பண்டிவிரிச்சான்  அரசினர்  தமிழ்  கலவன்  பாடசாலையிலே  கல்விகற்று  வந்தனர்.

இவர்கள் மடுவிலிருந்து புறப்படுகின்ற பயணிகள் பேரூந்திலேயே சென்று வருவார்கள். இங்கு பாடசாலை   மாணவர்களுக்கு   தனியாக   பொதுமக்களுக்குத் தனியாக என பேரூந்து இல்லாமையால் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்ற பேரூந்திலேயே பயணிப்பார்கள்.

அவ்வாறே 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாளும் வழமைபோல் பேரூந்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர், பேரூந்து மடுவை அண்மித்ததும், சரியாக 2.30 மணியளவில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் இப்பேரூந்தின் மீது கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 09 பாடசாலை சிறார்கள் 01 ஆசிரியர், 01 பாடசாலைச் சிற்றூழியர், 01 மருத்துவ உதவியாளர், 01 பேரூந்தின் ஓட்டுநர், 01 பேருந்தின் நடத்துனர், 01 மடுத்தேவாலய உழவூர்தி ஓட்டுநர் என 15பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 13 மாணவர்கள் உள்ளடங்கலாக 21பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தள்ளாடி முகாமிலுள்ள இராணுவத்தினர் அப்பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா.; ஒரு சிறுவனும் பாடசாலை அதிபரும் சில நாட்களிர் மரணமானார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. கொண்ஸ்ரன்ரயின் புறுனோ, 13
  2. கொண்ஸ்ரன்ரயின் பிறிற்றன், 15;
  3. அந்தோனி பீரிஸ் ஜெனிஸ்ரன், 12
  4. அன்ரன் சதீசன், 11
  5. ஞானப்பிரகாசம் ஜோன் மில்டன், 16
  6. குணசிங்கம் அன்ரன் டெஸ்மன், 16
  7. கிருபைராசா ஜெராட்  ஞானகரன்,  29
  8. க. சண்முகசுந்தரம்,  61
  9. திருமதி. லெம்பேட் (அதிபர்), 51,
  10. பத்மராசா பேனாட்  ஜெனார்த்தனன்  12
  11. ரஞ்சன் ராஜசூரியர் பிரான்சிஸ்கா மங்களேஸ்வரி, 37
  12. ரஞ்சன் ராஜசூரியர் தர்சிக்கா சாமினி, 15
  13. செபமாலை மேரியோசப்பின் (ஆசிரியர்), 31
  14. சந்தான் பெனாட் றோஜ், 16
  15. சூசையப்பு சாம்சன் சொய்சா, 13
  16. ஸ்ராலின் சுரேஸ் லெம்பேட், 23
  17. விமலநாதன் றீத்தம்மா (தாதி), 33
  18. பிரான்சிஸ் சேவியர் ஆன்ஸ் பசிலியோ, 11
  19. செல்வசிங்கம் யூட் கொலின் ஜெனி, 12
  20. செல்வசிங்கம் யூட் கொஸ்ரன ரெனி;, 15

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments