
தம்ப்பிராய் சந்தை குண்டுவீச்சு – 17 மே 1996
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கே இருபது கி.மீ. தூரத்தில் பூநகரி அமைந்துள்ளது. பூநகரிப் பிரதேசத்திற் காணபப்டுகினற் வயலும் வயல் சார்ந்த ஒரு சிறிய கிராமம் தம்பிராய் கிராமம் ஆகும். இங்குள்ளவர்களின்; பிரதானதொழில் விவசாயமாகும்.
1996ஆம் ஆண்டு ஏ -9 பிரதான வீதியை மையமாகக் கொண்ட இராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலப்பகுதியாகும். அக்காலப்பகுதியில் 1996 மே பதினேழாம் திகதி காலை பூநகரி தம்பிராய்ப்பகுதி; மக்கள் மீது முற்பகல் பத்து மணியளவில் பூநகரி; வான் பரபப்பினுள் வந்த சிறீலங்கா விமானப்படையின் இரண்டு ‘கிபீர்’ விமானங்கள் பல தடவைகள் வானில் வட்டமிட்டன.
இதனால் தம்பிராய்ச் சந்தையி;ல் நின்ற மக்கள் அச்சத்தினால்; அங்கு மிங்கும் ஓடினார்கள், இவர்களில் சிலர் ஒரு பனங்கூடலினுள் பாதுகாபபு; தேடி ஒழிந்து கொண்டார்கள். கிபீர் விமானங்கள் வீசிய குண்டுகள் பனங்கூடலினுள்ளும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் விழுந்து வெடித்ததால், ஐந்து பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகியதுடன், ஒன்பது பேர் காயமடைந்தார்கள்.
மேலும் படுகாயமடைந்தவர்களில் இரண்டு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள்.
இத்தாக்கு;குதலில் கொல்ல்லப்பட்ட்ட தம்ப்பிராயைச் சேர்ந்ந்த்த சூசைப்ப்பிள்ளை பிரான்சிஸ்சின் மனைவியான றீட்ட்டம்ம்மா சம்பவத்தைப்;பற்றி குறிப்பிடுகையில், ‘1996ஆம் ஆண்டு மே மாதம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை என்னுடைய நான்கு பிள்ளைகளில் மூவர்பாடசாலைக்குச் சென்ற நிலையில் கடைசிப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு எமது தோட்டத்திற்குப் போனேன். என்னுடைய கணவர் பொருட்கள் வாங்குவதற்காக தம்பிராய்ச் சந்திக்குப் போயிருந்தார். அந்தவேளை வானில் வந்த குண்டுவீச்சு விமானங்கள் தம்பிராய் சந்தியிற் குண்டுகளைப் போட்டன.
உடனே கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்று அஞ்சினேன். அயலவர்கள் வந்து தேற்றிய போதும் எனது பிள்ளையையும் கூட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்குப் போய்ப் பார்த்தவேளை எனது கணவரின் உடல் முழுதும் குண்டுச் சன்னங்கள் துளைத்த நிலையில் சடலமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அதைப் பார்த்த நான் என்னசெய்வதென்றே தெரியாத நிலையில் மயக்கமடைந்து விழுந்து விட்டேன். பின்னர் என்னையும் எனது கணவரையும் என்னுடைய அண்ணா வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் கணவரை அடக்கம் செய்தோம். இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் எனது கணவர் உட்பட ஐந்து பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்கள் என்பதுடன், மற்றும் ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் பின்னர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் எங்களைப் போன்று வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள்.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
![]()