×

தம்பலகாமம்-98 படுகொலை – 01 பெப்பிரவரி 1998

தம்பலகாமம்-98 படுகொலை – 01 பெப்பிரவரி 1998

திருகோணமலை நகரத்திலிருந்து பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தம்பலகாமம் பிரதேசத்தில் பாரதிபுரம் கிராமம் அமைந்துள்ளது.

01.02.1998 அன்று காலை 5.00க்கும் 6.00 இடைப்பட்ட நேரத்தில் பாரதிபுரம் இராணுவ முகாமிலிருந்த  இராணுவத்தினர்  அப்பகுதியாற்  சென்ற  பொதுமக்களில்  எட்டுப்  பேரைக்கைதுசெய்து முகாமை சுற்றி நிறுத்திவைத்துச் சுட்டார்கள். உயிரிழந்த எட்டுப் பேரில் நான்கு பேர் மாணவர்களாவர். உயிரிழந்த ஆறுமுகன் சேகர் என்பவரின் ஆண் உறுப்பை வெட்டி அவரது வாய்க்குள் திணித்திருந்தனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. ஆறுமுகம் சேகர் கமம் –
  2. அமிர்தலிங்கம் சுரேந்திரன் மாணவன் 14
  3. அமிர்தலிங்கம் கஜேந்திரன் தொழிலாளி 18
  4. பொன்னம்பலம் கனகசபை கமம் –
  5. முருகேசு ஜனகன் மாணவன் 17
  6. நாதன் பவளநாதன் தொழிலாளி 45
  7. சுப்பிரமணியம் திவாகரன் – –
  8. குணரத்தினம் சிவராஜன்  –  –

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments