×

தருமபுரம் படுகொலை – 25 நவம்பர் 2007

தருமபுரம் படுகொலை – 25 நவம்பர் 2007

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் கிராம மக்கள் விவசாயத்தினையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள தருமபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது 2007 நவம்பர் 25ஆம் நாள் காலை 7.15 மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் எட்டுக்கும் அதிகமான குண்டுகளை வீசின. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீதும் அதனை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்துவெடித்தன.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் எட்டாம் யுனிற் பகுதியில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் வர்ணலிங்கம் குடும்பத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இச்சம்பவத்தில் வர்ணலிங்கத்தின் மகன் கமல்ராஜ் என்பவரின் மனைவி தனயோகம் கால், கையை இழந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது மரணமானார்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. ஆறுமுகம் வர்ணலிங்கம்  54
  2. வர்ணலிங்கம் சரஸ்வதி  49
  3. வர்ணலிங்கம் சுமிதாநந்தினி 25
  4. முருகையா லுபாசினி 15
  5. கமல்ராஜ் தனயோகம் 19

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments