
காலத்தால் செதுக்கப்பட்ட சிலைகளல்ல இவர்கள் !
காலத்தால் செதுக்கப்பட்ட சிலைகளல்ல இவர்கள் !
ஒரு காலத்தைச் செதுக்கிய சிற்பிகள்!
காற்றுக்கும் திசையினை கற்றுக் கொடுப்பவர்கள்.
கனவுகள் இவர்களுக்கில்லை, இவர்கள் எதிரியின் கனவுகள்.
சூரியன் வந்து சுடுவதில்லை வெப்பம் இவர்கள் விழிகளின் உருவாக்கம்.
காட்டு மரங்களே கூரை.
மண்மேடுகள் மலரணைகள்.
பனியில் குளிரெடுத்தால் பகைவனின் பீரங்கிகளை எரித்தே குளிர் காய்வர்.
எதிரியின் எல்லைகள் இவர்களின் விளையாட்டுத் திடல்கள்.
எதிர்கொள்ளும் இரவுகள் திருவிழாக்கள் போரிடும் இரவெல்லாம் தீபாவளிகள்.
மரணம் இவர்களை தொடுவதற்கு அஞ்சும் கால்களில் விழுந்து மண்டியிடும்
கைகளில் கிடப்பது துப்பாக்கிகள் அல்ல;
வரலாற்றின் நெம்புகோல்கள்.
– சூரியபுத்திரர்கள் 1995