×

2021-10-01

வரலாற்றில் இன்று: 2021-10-01

1827 – ரஷ்ய-பாரசீகப் போர்: ரஷ்சிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிடப்பட்டது.

1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.

1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1898 – ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.

1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1918 – முதலாம் உலகப் போர் : அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.

1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் ஜேர்மனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.

1942 – இரண்டாம் உலகப் போர் : அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.

1946 – நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.

1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 – சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

1960 – நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1961 – கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.

1964 – ஜப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.

1966 – அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

1969 – கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.

1971 – வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் ஆரம்பமானது.

1975 – சீசெல்சு சுயாட்சி பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.

1977 – பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.

1978 – துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.

1982 – சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.

1985 – மரக்கால் நடவடிக்கை: இஸ்ரேல் தூனிசியாவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தைத் தாக்கியது.

1989 – தன்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.

1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

1994 – பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 அவுஸ்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.

2012 – ஆங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 102 பேர் காயமடைந்தனர்.

2015 – குவாத்தமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.

2017 – காத்தலோனியாவில் இடம்பெற்ற விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என எசுப்பானிய நீதிமன்றம் அறிவித்தது.

2017 – ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாநிலத்தில் இசை விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.

Download Nulled WordPress Themes
Free Download WordPress Themes
Premium WordPress Themes Download
Premium WordPress Themes Download
online free course
download lenevo firmware
Download WordPress Themes Free
free download udemy course