வரலாற்றில் இன்று: 1990-07-10
முதல் கடற்கரும்புலித்தாக்குதல்
முதன்முதலாக தமிழீழக் கடற்பரப்பில் 10.07.1990 அன்று விடுதலைப்புலிகளால் ஓர் கடற்கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. சிறிலங்காக் கடற்படையின் ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலைத் தகர்க்கவென மேற் கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளான மேஜர் காந்த ரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய போராளிகள் காவியமாகினர்.
