
ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் கோடி ,
ஆண்ட நம் தமிழர்
வாழ்ந்த எம்பூமி,
மீண்டிட வேண்டி மலர்ந்த நல்தோழர் நீண்ட தம் ஆயுளை நிலைத்திட எண்ணார் !
பாண்டவர் புரிந்த பாரதப் போரும் பைந்தமிழ் ஈழப் புலிகளின் போரும் ஆண்டவர் போற்றும் அற்புதப்போரே – இதில் மாண்டவர்,
மடிந்தவர் மனிதர் அல்லர்.
மாதவம் உற்ற மாசிலா மேனியர்.
மாணவர் ஆனவர் மன்னரைப் போன்றவர்,
ஆனவர் ஆயவர், அறிவிலும் மேலவர்.
வானவர் போலநல் வல்லமை பெற்றமா மனிதராய் ஆன மறத்தமிழ் வீரர்!
மார்பினை மண்ணின் கேடயம் ஆக்கி,
மனவலிமையை போர் ஆயுதம் ஆக்கி,
தோள்களில் துன்பம் யாவையும் ஏந்தி,
துணிகரம் மிக்க
திறம்படை ஆகி – எதிரியை தருணம் பார்த்துத் தாக்கி அழித்திட ஆன்மபலம் மிக்க அண்ணனும், தம்பியும் ,ஆசைகள் துறந்த அக்காவும், தங்கையும் ஒன்றாய் மண்ணினை மீட்க ,
கண்ணினை மூடி கத்தியில் நடந்த தர்ம வீரர் !
கரும்புலி, கடற்புலி, பெரும்புலி, தரைப்புலி, பெண்புலி பலவும் போர்க்களம் வென்று புண்ய பூமிக்கு அடித்தளமாகி பொன்னும் மணியுமாய் பளிச்சிடும் இரத்தினமாகி விண்ணிலும், மண்ணிலும் வாழும் மழைத்துளியிலும்.
கண்ணிலும் கடைக்கண் விழியிலும் தூணிலும் துரும்பிலும் துலங்கும் ஒளியிலும்.
இருளிலும் ஒளியிலும் இரண்டறக் கலந்து அகிலம் எங்கணும் அணையாத ஜோதியாய் அனைவரும் போற்றும் அபூர்வச் சுடர்களே.
திட்டம் போட்ட தினம் தவறாமல் – எதிரியின் தளத்தினை அடித்து தத்தம் உயிர்களை தமிழ் மண்ணிற்காக தற்கொடை யாக்கி இரத்தம் சொட்டச் சொட்ட இன்னுயிர் நீத்திடும் இன்னரும் வீரமாவீரர் – இவர்க்கு ஈகைச் சுடரை ஏற்றித் தொழுவோம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்றெனச் சொன்னது முன்பு – அதனினும் நன்று தமிழீழ மாவீரரைத் தொழுவது – என்றுமே இன்றைய எம்மவர் தொண்டு அஞ்சலி செலுத்தி ஆராதிப்போம்.
– உலகத் தமிழர் இயக்கம், கனடா
சூரியப்புதல்வர்கள் 1995