
ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று: ஜூன் 13, 1990 , இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம்
ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஜூன் மாதத்திற்கு எப்போதுமே ஒரு இரத்தக்களரியான பக்கமுண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஜூன் 13-ஆம் திகதியில்தான், தமிழீழ மண்ணில் ‘இரண்டாம் கட்ட ஈழப்போர்’ முழு வீச்சில் ஆரம்பித்தது.
இந்திய அமைதிப்படையை (IPKF) இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில், அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாசவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சுமார் 14 மாதங்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அமைதிப்படை முழுமையாக வெளியேறிய பிறகு, ஸ்ரீலங்கா இராணுவம் கிழக்கு மாகாணத்தில் ஊர்க்காவல் படைகளை உருவாக்கி தமிழ் கிரமங்கள் மீது தொடற்சியான தாக்குதல் நடத்தியது .நுற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் கிழக்கில் 2 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு அதை முன்னாள் போராளிகளே செய்ததாக சித்தரித்ததை போல இஸ்லாமிய மக்களை கொன்றுவிட்டு அதை போராளிகளே செய்ததாக கூறி தமிழ் முஸ்லீம் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்தவர் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன. இவரே ஜேவிபி தலைவர் ரோஹன விஜயவீர உட்படட பலரை உயிரோடு எரிப்பதற்கு உத்தரவிட்டவர்.
நிலைமை முற்றிலும் கைமீறிப் போவதைத் தடுக்க, அப்போதைய அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் (A.C.S. Hameed) ஜூன் 13 அன்று மதியம் தொலைபேசி வாயிலாகப் விடுதலை புலிகளுடன் தொடர்புகொண்டு ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அவசரமாக மேற்கொண்டார். ஆனால், அதே ஜூன் 13-மாலை வடக்கிலும் கிழக்கிலும் (முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில்) ஸ்ரீலங்கா இராணுவம் நேரடி தக்குதலை ஆரம்பித்தது. அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன, “அரசாங்கம் தன் முழு படை பலத்தையும் பிரயோகித்து போராளிகளை ஒடுக்கும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதுவரை பெரும்பாலும் கொரில்லாப் போராக இருந்த ஈழப் போராட்டம், முதல்முறையாக ஒரு மரபுவழிப் போராக (Conventional War) உருமாறியது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் பெரும் அவலம் இங்கிருந்துதான் தீவிரமடைந்தது.
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் போரளிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதும், அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசு மக்களின் மீது விதித்த கடுமையான பொருளாதார மற்றும் மருந்துத் தடைகளும் இதே காலகட்டத்தின் நேரடி விளைவுகள்தான்.