
முறிகண்டி என்பது வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த ஒரு அழகான ஊர். இது வன்னிப் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஆகும் வனம் சூழ பக்தியோடு வாழும் மக்கள் நிறைந்த ஊரே முறிகண்டி.
முறிகண்டி ஒரு காலத்தில் பசுமையான காடுகளும் மக்களும் நிறைந்த அமைதியான ஊராக இருந்தது. இங்கு மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்து வாழ்ந்தனர். ஆனால் சில வருடங்களுக்கு முன் நடந்த போரின் காரணமாக இந்த ஊர் மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழ் தங்கள் வீடுகள் மற்றும் வியாபார வாழ்விடம் சொத்துக்கள் என பல வற்றை இழந்தனர். போர் முடிந்தபின், மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி வீடுகளை கட்டி வாழத் தொடங்கினர். இன்று முறிகண்டி மீண்டும் வளர்ந்து வருகிறது. விவசாயம், பள்ளிகள், வீடுகள் அனைத்தும் மெதுவாக முன்னேறி வருகின்றன.

முறிகண்டி பிள்ளையார் ஆலயம் மிகவும் பிரபலமானது வடக்கில் இருந்து தெற்காக பயணிக்கும் பயணிகள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் பயணிகள் அனைவரும் முறிகண்டி பிள்ளையாரை வழிபட்டு அங்கு இளைப்பாறிச் செல்வது வழக்கம் எ9 வீதிக்கு அருகே வீற்றிருக்கும் பிள்ளையார் அதைச் சூழ உள்ள கச்சான் கடைகள் முறிகண்டி ஊரின் அடையாளம் வன்னியின் அம்பகாமம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து வரும் கச்சான் முறிகண்டியில் பதமாக வறுக்கப்பட்டு சுவையாக மாறும் ஈழத் தமிழருக்கு கச்சான் என்றால் முறிகண்டி என்று ஞாபகம் வரும்மளவுக்கு பிரசித்தமான ஊர் முறிகண்டி.
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது போர்கள எல்லையாகவும் இருந்தது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் மற்றய பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு தரைவழிப் பாதையாகவும் இருந்தது முறிகண்டி ஈழப் போராட்டத்தில் குருதியாலும் தியாகத்தால் நனைந்த முறிகண்டி எண்ணற்ற போராளிகளையும் மாவீரர்களையும் தாய் நிலத்துக்கு தந்து உயர்வாக நிற்கிறது.
வட்டக்கச்சி வினோத்