
சண்டாளி, சதிகாரி, சந்திரிகா பேய்க்காளி. கொண்டவனை, அப்பனை கொலைக்குக் கொடுத்தவளே!
ஆட்சிக்கொலு அமர்ந்த அரக்கியே! உன்னுடைய மாட்சிக்குப் பலி எங்கள் மாசறியாக் குஞ்சுகளா?
பிஞ்சுகளைப் பிய்த்தெறியும் பிடாரியே! பிசாசே! எஞ்சியுள்ள பரம்பரைக்கும் ஏன் பழியை தேடுகிறாய்? பள்ளிச் சிறுவரென்ன பயங்கரவாதிகளா? துள்ளிவிளையாடி துரத்திப்பிடித்தவரை கொள்ளிக்கும் உடலின்றி குலைத்தாயே குடிகேடி!
துண்டாடி எம் சிறாரை துவசம் செய்பவளே மண்டை ஓட்டு மகாராணி உனக்கு ரெண்டுண்டு எண்ணிப்பார்!
‘குடி’யாட்சி நீ நடாத்த குடும்பமாய் அழிப்பவளே!
அடிபெயர்ந்து விழுமுந்தன் அரசு விரைவினிலே!
புத்தமதத் தத்துவத்தை தத்தெடுத்த உத்தமரே?
சத்தியத்தை சவக்குழிக்கு சமர்ப்பணம் செய்தவரே!
யுத்தமுனை சென்று ரத்தப்பலியெடுக்க – எம் வித்துகளை அழிக்க விடையளிக்கும் விசர்களே!
உத்தமன் புத்தபிரான் உம்முன்னால் இன்றுவரின் ‘உம்ப மரணுவா” தான் உங்கள் பதிலாயிருக்கும்.
இத்தனைக்கும் பின் தெற்கில் இலைநக்கும் துரோகிகளே! பெற்றவளை விற்றுப் பிழைப்பதிலும் பெருமையுண்டோ?
– உமக்கு
கச்சைகூட வேண்டாம் கையினிலே! ஓடெடுத்து பிச்சை பெற்று உண்ணும் பெருமை அதில் உண்டூ!
– நாவண்ணன்
– வி.பு இதழ் 1995