×

உழவனூர் கொத்துக் குண்டு வீச்சு – 29 நவம்பர் 2008

உழவனூர் கொத்துக் குண்டு வீச்சு – 29 நவம்பர் 2008

உழவனூர் குடியிருப்பில் அண்மையில் பெரும் வெள்ள அனர்த்தத்தினால் அங்கு இடம் பெயர்ந்து வந்த மக்கள் ஓரளவுக்குத் தம்மைச் சுதாரித்துக் கொண்டிருந்தனர். நவம்பர் 29 அதிகாலை 1.30 க்கு அவர்கள் நித்திரையில் இருந்தபோது 16 கொத்துக் குண்டுகள் அக் குடியிருப்பின் மீது வீசப்பட்டன. வெள்ளம் காரணமாக பதுங்கு குழிகளை அமைக்க முடியாதிருந்த இடம் பெயர்ந்த மக்கள் அடர்ந்த இருளில் வெள்ளத்தினூடாக அண்மையிலிருந்த காட்டினுள் பாதுகாப்புத் தேடி ஓடினர். இக் குண்டுவீச்சில் ஒரு 5 வயதுப் பிள்ளை, ஒரு பொதுமகன் ஆகியோர் கொல்லப்பட்டதுடன், 7 பிள்ளைகள் உட்பட 19 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பிள்ளைகளில் இருவர்  தம்  அவயவங்களை  இழந்திருந்தனர்.

29 நவம்பர் அன்று அங்கு வெடிக்காதிருந்த ரஷ்யத் தயாரிப்பான குண்டு ஒன்றினது படம் மேலே காட்டப்பட்டுள்ளது. இவ்வகைக் குண்டுகளை கொத்துக் குண்டு என அழைப்பர். ஒரு குண்டுக்குள் மேலும் பல குண்டுகள் பொதிந்துள்ள இக் குண்டுகள் பெரும் பரப்பளவில் சேதம் ஏற்படுத்துவதனால் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. இதனால் தற்போது சர்வதேச மட்டத்தில் இவ்வகைக் குண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பல நாடுகள் இக் குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை என அறிவித்துள்ளன. இந்தத் தாக்குதலின் பின்னர், வன்னி மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில், ஆறு மாதங்களில் பல தடவைகளில் இக் குண்டுகள் வீசப்பட்டன என அறியப்பட்டுள்ளது. மோசமடைந்து சென்ற நிலமையினால், குண்டுவீச்சு நடக்கும் இடங்களிலேயே சாட்சியங்களைச் சேகரிக்க முடியாமற் போனது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. சிவகுமார் சுதர்சன், 05
  2. ராமன் ராமசாமி, 80

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments