×

உருத்திரபுரம் செல்வீச்சு – 24 அக்டோபர் 2008

உருத்திரபுரம் செல்வீச்சு – 24 அக்டோபர் 2008

உருத்திரம் கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ளது. அக்டோபர் இறுதியில் ஷெல்வீச்சு நடந்தபோது உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 350 மாணவர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. அண்மையில் இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்வதற்காக அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். இந்த இடத்தின்மீது 24 அக்டோபர் அன்று ஷெல்லடி மேற்கொள்ளப்பட்டது.

இத் தாக்குதலின் இலக்கு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ் வiரைபடம் இப்பகுதியில் பொதுமக்கள் நிலையங்கள் மிகவும் செறிவாக உள்ளதைக் காட்டுகின்றது. ஒரு தகப்பனும், அவரது வயதுவந்த  மகனும் இந்த ஷெல்லடியில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தந்தையின் மகனும், மற்றவரின் சகோதரனுமாகிய சதானந்தன் பின்வருமாறு கூறுகின்றார்:

‘தொடர்ச்சியான ஷெல்லடி காரணமாக நாம் கிளிநொச்சியில் உள்ள எமது வீட்டை விட்டு இடம்பெயர்ந்தோம். இருப்பினும், சிலசமயங்களில் நாம் எமது உடமைகளை வீட்டிலிருந்து எடுத்து வருவதற்காக அங்கு செல்வதுண்டு. எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோவிலின் நிர்வாக சபையின் தலைவராக எனது தந்தை இருந்தார்.

அன்றைய தினம் நாம் மூவரும், சபையின் ஏனைய உறுப்பினரும் அங்கு சென்று உழவுயந்திரப் பெட்டியில் எமது உடமைகள் சிலவற்றையும், கோயில் பொருட்களையும் ஏற்றிவிட்டு, எனது தந்தையும், சகோதரனும் மோட்டர் சைக்கிளில் உழவுயந்திரத்தின் பின்னால் வந்து கொண்டிருந்தனர். நானும் சிலரும் எமது வீட்டில் சிறிது தரித்து நின்றோம். எனது தந்தை போவதற்கு முன்னர், ஷெல்லடி மிக மோசமாக இருப்பதனால் கவனமாக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றார். துர்ப்பாக்கிய வசமாக ஷெல்லடியில் கொல்லப்பட்டவர்கள் அவர்களாக இருந்தனர். இவர்தான் எனது சகோதரனின் இரண்டு வயதுப் பிள்ளை.’

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. ராமலிங்கம் விஜாயந்தன், 32
  2. சின்னையா ராமலிங்கம், 68

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments