
வட்டக்கச்சி குண்டுவீச்சுகள் – 1- 20 டிசம்பர் 2008
டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து 22 ம் திகதிவரை வட்டக்கச்சிப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கர ஷெல் வீச்சினால் பல பிள்ளைகள் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பலர் காயமடைந்தனர். டிசம்பர் முதலாம் திகதி பாடசாலையிலிருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த 6 வயதுச் சிறுமி நிரோஜனி அருளானந்தம் ஷெல் வீச்சில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். டிசம்பர் 17ம் திகதி 5 வயதுக் குழந்தையான ரவிசங்கர் ராஜிதன் ஷெல்லடியினால் கொல்லப்பட அவரது தாயார் படுகாயமடைந்தார். இந்த ஷெல் வீச்சில் மேலும் இரண்டு வளர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். சகோதரங்களான 8 வயது சிந்துஜாவும் 10 வயது மிதுஷனும் காலிலும், மார்பிலும், வயிற்றிலும் படுகாயமுற்றனர். இக் காலத்;தில் வட்டக்கச்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 19 பொதுமக்கள் காயமடைந்தனர். வட்டக்கச்சியில் இயங்கிக் கொண்டிருந்த வைத்தியசாலையில் அச்சமயம் கடமையாற்றிய வைத்தியர் கிருஷ்ணபிள்ளை பின்வருமாறு கூறினார்:
‘வைத்தியசாலையில் இருந்த 70 உள்நோயாளரும் 550 வெளிநோயாளரும் தம்மை வான்குண்டு வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார்கள். வெள்ளம் நிறைந்த பதுங்கு குழிகளினுள்ளும் பயம் காரணமாக அவர்கள் பாய்ந்தனர். வான் தாக்குதலினால் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைக் கூடம் சேதமாகிவிட்டது.’
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()