
வள்ளிபுனம் குண்டுவீச்சு – 30 அக்டோபர் 2008
வள்ளிபுனம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பின் மீது 30 அக்டோபர் காலை 9.30 மணிக்கு நிகழ்த்தப்பட்ட வான்குண்டு வீச்சு ஒரு பதினான்கு வயது வாலிபனைக் கொன்றதுடன், ஆறு பொது மக்களையும் காயத்துக்கு உள்ளாக்கியிருந்தது. முக்கியமாக, குண்டுவீச்சு நடந்த சமயம் கிட்டத்தட்ட 1000 பிள்ளைகள் பாடசாலையில் இருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மக்கள் இடப் பெயர்வு காரணமாக மாணவர் தொகை 2000 மாக அதிகரித்து அதன் விளைவாக பாடசாலை இரண்டு நேரப் பாடசாலையாக இயங்கிக் கொண்டிருந்தது. இப் பாடசாலைக்கு 200 மீற்றர் தொலைவில் 190 பிள்ளைகளைக் கொண்ட செந்தளிர் சிறுவர் இல்லம் அமைந்திருந்தது. குண்டின் சிதறல்கள் இந்த இல்லத்தின் காணியிலும், அவற்றில் ஒன்று சிறுவர் விடுதியின் பிற்புறத்திலும், இன்னுமொன்று உணவு உட்கொள்ளும் அறையின் முற்புறத்திலும், மற்றொன்று பிள்ளைகள் பயன்படுத்தும் கிணற்றின் மீதும் வீழ்ந்தன. பிள்ளைகள் எவருமே இதனால் பாதிக்கப்படாமை பேரதிட்டமாகும்.

மேற்குறிப்பிட்ட தாக்குதல் நிகழ்ந்து மூன்று மாதங்களின் பின்னர், சிறுவர் இல்லத்துக்கு அண்மையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் வீச்சுக் காரணமாக, பெப்ரவரி 2009 இல் இல்லம் சுதந்திரபுரத்துக்கு இடம் பெயர்ந்தது. இந்தப் புதிய இடத்திலும் ஷெல் வீச்சினால் இல்லத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை கொல்லப்பட்டதுன் மூன்று பிள்ளைகள் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()