
வல்வை-85 படுகொலை 10 மே 1985
யாழ்மாவட்டத்தில் பருத்தித்துறைப் பகுதியில் வல்வைக்கிராமம் உளள்து. 10.05.1985 அன்று சிறீலங்கா இராணுவம் வல்வைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தது 24 இளம் ஆண்களை கைது செய்தது. அங்குள்ள ஒரு பொதுமண்டபத்தில் இவர்கள் அனைவரும் அடைக்கப்பட்டனர். பின்னர் இம்மண்டபத்தின் மேல் குண்டு வீசப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 24 ஆண்களும் கொல்லப்பட்டனர். அதே சமயத்தில் அவ்வுர் கோவில் கேணியருகே மேலும் 12 பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைவிட மேலும்34 பொதுமக்கள்அன்று கொல்லப்பட்டனர். அவ்வுரில் அன்றைய தினம்70 பொதுமக்கள் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
![]()