×

வந்தாறுமூலை-90 படுகொலை – 05, 23 செப்ரெம்பர் 1990

வந்தாறுமூலை-90 படுகொலை – 05, 23 செப்ரெம்பர் 1990

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமதத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துளள்து. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழகமும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகும். மூவாயிரம் பதின்மூன்று கிழக்குப் மாணவர்கள் வரை ஆண்டு தோறும் கல்விகற்கிறார்கள். இவர்களில் ஏறக்குறைய ஐநூறு முதல் எழுநூறு வரையான பட்டதாரிகள்ஆண்டுதோறும் வெளியேறுகின்றா்கள். இப்பல்கலைக்கழகத்தில் கலை, வர்த்தகம், முகாமைத்துவம், விஞ்ஞானம், பௌதீகவியல், கணினி, இசை, நடனம் போன்ற பல்வேறு துறைகள் தமிழ்மொழி மூலம் கற்பிக்கப்படுகின்றன.

1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்நட்டு யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதன் விளைவாகப் பொதுமக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்தார்கள். உலகத்தில் பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் பாடசாலைகள் வணக்கத் தலங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பதற்காகச் தஞ்சமடைவது வழக்கமாகும். அவ்வறே கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர்.

05.09.1990 அன்று சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிலிருந்து பெருந்தொகையான இராணுவத்தினர் வாகனங்களில் பல்கலைக் கழகத்திற்கு வந்து பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த இளைஞர்களில் 158 பேரைக் கைதுசெய்து கைகள், கால்கள் கட்டி இராணுவ வாகனங்களில் ஏற்றி, எல்லையோரக் கிராமங்களுக்குக் கொண்டு சென்று, துப்பாக்கிகளால் சுட்டும், ஏனைய கூரிய ஆயுதங்களினால் தாக்கிப்படுகொலை செய்தனர்.

23.09.1990 இல் மீண்டும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்த இராணுவத்தினர் அங்கு தஞ்சமடைந்திருந்த 16 பொதுமக்களை கைதுசெய்து கொண்டு சென்று, முதல் நாள் போன்றே இவர்களையும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக தமது வீடுகள், சொத்துக்கள் உட்பட அனைத்து உடமைகளையும் இழந்து மூன்று வேளை உணவினை ஒழுங்காக உண்ண முடியாமல் அகதிகளாக இருந்த பொதுமக்களில் இருநூற்றி இருபத்தாறு பேர் இராணுவத்தினரால் கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

அத்துடன், பலர் காணாமல் போனார்கள்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

01 இளையதம்பி பாக்கியநாதன் தொழிலாளி 22

02 இராசையா ஜெயநாதன் தொழிலாளி 35
03 இராசையா டேவிட் சாரதி 34
04 இராசதுரை கனகசபை கடற்றொழில் 18
05 நாகராசா ரகுநந்தன் தொழிலாளி 27
06 நடராசா ஜோச்ஸ்ரான்லி அரச ஊத்தியோகத்தர் 39

07 நடேசன் சுப்பிரமணியம் சுயதொழில் 29
08 நவரத்தினம் பிரியதர்சினி – 5
09 நல்லதம்பி மகேந்திரன் தொழிலாளி 28
10 நல்லதம்பி நாகராசா சுயதொழில் 25
11 கந்தையா கதிரவேல் தொழிலாளி 20
12 கந்தையா தவராசா தொழிலாளி 18
13 கந்தையா ஆனந்தரெட்ணம் கடற்றொழில் 28
14 கந்தையா செல்வராசா தொழிலாளி 28

15 கந்தப்போடி ஜெயசீலன் தொழிலாளி 19

16 கந்தப்போடி செல்வராசா தொழிலாளி 45

17 கந்தசாமி நவரெட்ணம் சுயதொழில் 19
18 கந்தசாமி சிறிஸ்கந்தராசா சுயதொழில் 24

19 கதிராமப்போடி பரமேஸ்வரி வீட்டுப்பணி 31

20 கணேசன் தியாகராசா தொழிலாளி 24
21 கிருஸ்ணப்பிள்ளை முருகேசு தொழிலாளி 24
22 கருணாகரன் அருணாசலம் தொழிலாளி 29
23 கணபதிப்பிள்ளை  தங்கத்துரை சுயதொழில் 25
24 கணபதிப்பிள்ளை முருகையா தொழிலாளி 18
25 பூபாலப்பிள்ளை தெய்வேந்திரமூர்த்தி அரசஊழியர் 33

26 பஞ்சாசரம் நடராசா தொழிலாளி 25
27 வைரமுத்து புஸ்பராசா சுயதொழில் 40
28 வைரமுத்து தர்மலிங்கம் சுயதொழில் 60
29 தாமோதிரம் வள்ளிப்பிள்ளை விவசாயம் 77
30 தம்பிஜயா ஜெகன் தொழிலற்றோர் 11
31 தம்பியப்பா வினாயகமூர்த்தி சாரதி 26
32 தம்பிமுத்து பீதாம்பரம் மாணவர் 18
33 மார்க்கண்டு மகேந்திரன் தனியார்தொழில் 19

34 மாமாங்கம் சண்முகநாதன் கடற்றொழில் 18
35 மாரியப்பா தமிழ்செல்வன் மாணவர் 15
36 முத்தையா கந்தசாமி மாணவர் 19
37 முத்துப்பிள்ளை தருமலிங்கம் தொழிலாளி 69

38 மூத்ததம்பி சின்னமுத்து தொழிலற்றோர் 70
39 முத்துலிங்கம் மோகனசுந்தரம் கடற்றொழில் 27

40 மகேந்திராஜா சிலக்சனா தொழிலற்றோர் 6
41 அமிர்தலிங்கம் ஜெயசங்கர் சுயதொழில் 36
42 அழகிப்போடி குமார் மாணவர் 21
43 அழகையா யோகராசா தொழிலாளி 19
44 அருமைத்துரை விமலன் தொழிலாளி 18
45 அருமைத்துரை இன்பம் சுயதொழில் 18
46 அருணாச்சலம் சினன் த்தம்பி கடற்றொழில் 44

47 ஆறுமுகம் கந்தலிங்கம் சுயதொழில் 30
48 ஆறுமுகம் கிருபாமூர்த்தி தொழிலாளி 26
49 ஆறுமுகம் தாமோதரம்பிளi; ள தொழிலாளி 22

50 ஆறுமுகம் விவேகானந்தன் தனியார்தொழில் 29

51 அல்போனஸ் ; நெல்சன் மாணவர் 18
52 ஜோசப் சுந்தரலிங்கம் தொழிலாளி 33
53 ஜோசப் சிவகுமார் தொழிலாளி 16
54 கே.கனேஸ்வரி தனியார்தொழில் 26
55 கே.சசிதேவி தொழிலற்றோர் 5
56 கோ.மகேந்திரன் சுயதொழில் 27
57 சோமலிங்கம் வாசகன் அரசஊழியர் 70
58 செல்லையா உதயநாதன ; விவசாயம் 28
59 செல்லையா சுப்பிரமணியம் சுயதொழில் 59
60 செல்வராசா உதயகுமார் சுயதொழில் 31
61 செல்வராசா நவரெத்தினம் தொழிலாளி 27
62 வெள்ளைச்ச மிகண்ணையா விவசாயம் 45

63 வேலுப்பிள்ளை பாக்கியராசா சுயதொழில் 32
64 வேலுப்பிள்ளை யோகன் சுயதொழில் 30
65 வேலுப்பிள்ளை ராசு தொழிலாளி 22
66 ஞானமூர்த்தி கதிர்காமத்தம்பி தனியார்தொழில் 20

67 சுப்பையா பாலசுப்பிரமணியம் சுயதொழில் 40
68 சுப்பையா எட்மன் சுயதொழில் 19
69 சதாசிவம் குபேரன் சுயதொழில் 19
70 சி.சரோசாதேவி தனியார்தொழில் 25
71 சின்னப்பு யோகராசா சுயதொழில் 28
72 சின்னத்துரை புஸ்பராசா கடற்றொழில் 22
73 சின்னத்தம்பி யோனாஸ் சுயதொழில் 35
74 சின்னராசா ராஜேந்திரம் மாணவர் 23
75 சீனித்தம்பி பிள்ளைநாயகம் தொழிலாளி 22
76 சித்திரவேல் சதாநந்தகுமார் மாணவர் 16
77 சிதம்பரப்பிள்ளை தணிகாசலம் அரச ஊழியர் 40

78 சிவகுரு நடராசா சுயதொழில் 37

79 சிவசுப்பிரமணியம் கிருபாகரன் மாணவர் 21
80 சிவலிங்கம் செல்லத்தம்பி சுயதொழில் 21
81 சண்முகம் செல்வரெத்தினம் மாணவர் 16
82 வீரக்குட்டி பாலகப்பொடி தொழிலாளி 55
83 எ.காசுபதி தொழிலாளி 74

இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
01 இந்துமதி மாணவர் 15
02 புலேந்திரன் சாந்தமேரி கடற்றொழில் 04

03 தம்பியப்பா குழநi; தவேல் சுயதொழில் 25

04 தங்கராசா பிரபானந்தராசா சுயதொழில் 27

05 சீ.சம்புரணநாதன் சுயதொழில் 27
06 சித்திரவேல் மணிமேகலை தொழிலாளி 18

இச்சம்பவத்தில் காணாமல்போனவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)

01 இராஜேஸ்வரி ரஞ்சன் தொழிலாளி 27
02 இராசநாயகம் சிவலோகநாயகி அரசஊழியர் 17

03 ந. கிருபாகரன் தொழிலாளி 22
04 கந்தையா முத்துவடிவேல் தொழிலாளி 17
05 குட்டியாணடி; இராமசாமி மாணவர் 22
06 தம்பியப்பா சகாயராசா தொழிலாளி 25
07 மாடசாமி சங்கர் மாணவர் 22
08 செல்வநாயகம் ஜெயராசா விவசாயம் 21
09 சா.வினோராஜ் மாணவர் 22
10 சாமுவேல் யோகேந்திரன் தொழிலாளி 19

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments