
வந்தாறுமூலை படுகொலை – 9 யூன் 1991
09.06.1991 அன்று மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய இராணுவ முகாம்களிலிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலைப் பிரதேசத்தினைச் சுற்றி வளைத்து வந்தாறுமூலை முதலாம் குறுக்கு வீதியில் நின்ற நான்கு பொதுமக்களை வாள்களினால் வெட்டிப் படுகொலை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து கருவங்கேணியில் ஆறு பொதுமக்களை சுட்டுப் படுகொலை செய்தார்கள். மொத்தமாகப் பத்துப் பொதுமக்கள் அன்றைய தினம் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்தார்கள்.
![]()