
வற்றாபப்ளை படுகொலை – 18 மே 1992
வடகிழக்கு மாகாணத்திலேயே சைவ மக்கள் மத்தியில் புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஓரத்தில் அமைந்துளள்து. ஆண்டுதோறும் வைகாசியில் வருகின்ற பூரணை தினத்தன்று பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெறுவதும், அதில் சிறீலங்காவின் பல பாகங்களிலிருந்தும் இலடச்க்கணக்கான பக்தர்கள் வந்து பொங்கலைச் சிறப்பிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில் 1990ஆம் ஆண்டிலிருந்து இராணுவ அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட ஒரு தொகைப் பக்தர்களைக் கொண்டே வருடாந்தப் பொங்கல் நிகழ்வு நடைபெறலாயிற்று.
வழமைபோல 18.05.1992 அன்று வற்றாப்பளைப் பொங்கல்தினம். சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் உச்சிக்காலப் பூசை நடைபெற்றுக்கொண்டிருந்த பி.ப 12:45 மணியளவில் முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பத்துப் பொது மக்கள் அவ்விடத்திலேயே உடல் சிதைக்கப்பட்டு உயிரிழந்ததுடன், ஏனைய ஐந்து பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்கள். அறுபது பேர்வரை காயமடைந்தார்கள்.
இத்தாக்குதலில் கணவரையிழந்த யோகேஸ்வரி சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கையில், ‘வற்றாப்பளை அம்மன் ஆலயப் பொங்கற் திருவிழா நேரத்தில் காவடிகளை வைத்து வாடகைக்கு வழங்கி வந்தோம். வழமைபோல் அன்றும் கணவரும் மகனும் காவடி எடுக்கும் இடத்திலும் நானும் மற்றப்பிள்ளைகளும் கோயிலுக்கு உட்புறத்திலும் நின்றிருந்தோம். அந்த வேளைதான் சிறீலங்கா இராணுவம் முல்லைத்தீவு முகாமிலிருந்து எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. ஓடிச்சென்று பார்க்கும் போது உடல் முழுதும் காயங்களுடன் மகனைக் கிடத்தியிருந்தார்கள்.
மகனுடன் அழுதுகொண்டிருக்கும் போது தகப்பனைத் தூக்கிகே காண்டுவந்தார்கள். தகப்பன் இறந்து விட்டதால் அழுது புலம்பத்தான் முடிந்தது. அப்படியே நானும் மயக்கமுற்று விழுந்துவிட்டேன். கணவர் இறக்கும்போது மூன்று மாதக் கா்ப்பிணியாகவும் மூன்று பிள்ளைகளின் தாயாகவும் இருந்தேன். எல்லோரும் சின்னப் பிள்ளைகள்.
சரியாகக் கஸ்ரப்பட்டுத் தான் பிள்ளைகளை வளர்த்தேன். தகப்பனின் காவடித் தொழிலையும் விடாமல் கூலிவேலை செய்து சீவத்து வருகின்றோம். பிள்ளைகளும்வளர வளரசெலவுகளும் அதிகரித்துகே காண்டே போகின்றது. தற்போது கூடசரியான கஸ்ரத்தின் மத்தியிற்சீவிக்கின்றோம்.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. நவரத்தினசாமி யுவராசினி மாணவி –
02. நவரத்தினசாமி சிவசேகரம் – –
03. நவரட்ணம் இந்துஜா மாணவர் 12
04. நவரட்ணம் சிவனேசம் வடீ ;டுப்பணி 32
05. நவரட்ணம் ராஜிதா மாணவர் 10
06. குழந்தைவேலு ஜெகதீஸ்வரன் தொழிலாளி –
07. குழந்தைவடிவேல் ஜெகதீஸவ் ரன் விவசாயம் 24
08. கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் மாணவர் 17
09. தம்பிராசா சிறீஸ்கந்தராசா விவசாயம் 33
10. மரியபிரகாசம் அந்தோனி தனியார்தொழில் 35
11. யோகராசா வதனி வீட்டுப்பணி 19
12. சதாசிவம் நவரட்ணம் கடற்றொழில் 36
13. சிறிஸ்கந்தராசா மாணவர் 09
14. சண்முகலிங்கம் – 42
காயமடைந்த்தவர்க்களின் விபரம் இல பெயர் தொழில் வயது
01. இந்துஜா மாணவி 06
02. ஈஸ்வரன் – 21
03. கனகேஸ்வரன் – 20
04. கார்த்திகேசு நித்தியராசா – 18
05. குமாரசாமி கணேசசுந்தரம் – 16
06. கணேசலிங்கம் புனிதா குழந்தை 03
07. முருகையா – 24
08. நேசம் – 32
09. வெற்றிவேலு மதிவதனம் – 13
10. றெஜித் – 27
11. சாந்தினிதேவி – 16
12. சண்முகலிங்கம் சந்திரசேகர் – 16
13. வடிவேலு – 40
14. விஜயரட்ணம் மாணவன் 07
![]()