
வவுனிக்குளம் படுகொலை – 26 செப்ரெம்பர் 1996, 15 ஆகஸ்ட் 1997
வடக்குக் கிழக்கில் காடுகளால் அதிகம் சூழப்பட்டுள்ள மாவட்டமான முல்லைத்தீவின் தென்மேற்குப் பகுதியை அண்டிய மாந்தை கிழக்குப் பிரதேசசெயலர் பிரிவினுள் வவுனிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் அமைந்துள்ளது.
வவுனிக்குளத்திலுள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டு; காலபப் குதியில் வவுனிககுளக் கிராமதத்தில் யாழ்ப்பாணம,; கிளிநொசச்சி போன்ற பலN;வறு பகுதிகளிலுமிருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக இருப்பிடங்களை அமைத்து நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மீது 26.09.1996 அன்று பிற்பகல் 02:10 மணியளவில் சிறீலங்கா விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் உடல்சிதறி உயிரிழந்ததுடன், பன்னிரண்டு பேர் வரையில் காயமடைந்தனர்.
1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியூடாக ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை ஒன்றினை கண்டி வீதியினை பிரதான நகர்வு மையமாகக்கொண்டு மேற்கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகளும், துப்பாக்கிச் சன்னங்களும், விமானக்குண்டுகளும் பொதுமக்களைத் தாக்கின. இராணுவ நடவடிக்கையினாற் பயந்த மக்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களில் வவுனிக்குள மக்களும் உள்ளடங்குவர்.
15.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்குப் பயந்து வவுனிக்குள மக்கள் தமது பகுதியில் அமைந்துள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களென பலதரப்பட்டவர்களும் காணப்பட்டனர்.
இதைவிட ஏனைய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இவ்வாலயத்தினுள்ளேயே தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அனைவருமே கர்த்தரே எம்மைக் காப்பாற்றுங்களென மனதாலும், வார்த்தைகளாலும் மன்றாடிய வண்ணமே இருந்தனர்.
15.08.1997 அன்று காலை 9மணியளவில் விமானப்படையின் இரண்டு; ‘கிபீர்’ குண்டுவீச்சு விமானங்கள் பொதுமக்கள் இருந்த தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. இந்தக் குண்டுத் தாக்குதல்களினால் பதினொரு பொதுமக்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர். பதினாறிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேவாலயமும் பலத்த சேதத்திற்குள்ளானது. படுகாயமடைந்த மக்களை உயிர் பிழைத்த மக்கள் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு வாகனத்திலும், மோட்டார் சைக்கிள்களிலும் கொண்டு சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 18.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார்.
அன்றைய தினம் மீண்டும் மு.ப 11.00 மணியளவில் அப்பகுதியில் அதே விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டுப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 20.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார். இவ்வாறாக வவுனிககுள கிறித்தவ தேவாலயம் மீதான விமானக்குண்டு தாக்குதலில் எல்லாமாகப் பதினொரு பொதுமக்கள் உயிரிழந்ததுடன், இருபதிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
![]()