
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர் படுகொலை – 18 நவம்பர் 2006
வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 2006 நவம்பர் 18ஆம் நாள் காலை 9.45 மணியளவில் தமது கல்லூரி வளாகத்தினுள் உள்ள புல்லுகளைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை அங்கு வந்த சிறீலங்கா இராணுவத்தினர் மாணவர்களை சமீபமாக வருமாறு அழைத்து கண்மூடிதத்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். உடன் மாணவர்கள் நிலத்தில் வீழ்ந்து படுத்தவுடன் இராணுவத்தினர் அச்சுதன் என்ற மாணவனை எழுந்து வரும்படி அழைத்தனர். அவர் எழுந்து அவர்கள்முன் கைகளை உயர்த்திக்கொண்டு சென்றபோது அவர்மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அவர் அவ்விடத்திலேயே துடிதுடித்து வீழ்ந்தார்.
மாணவர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்று கத்தியபோதும். அவர்கள் எதனையும் பொருட்படுத்தாது ஈவிரக்கமற்ற முறையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதன்போது 04 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 11 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()