×

வீரமுனை படுகொலைகள் – 20 யூன் 1990

வீரமுனை படுகொலைகள் – 20 யூன் 1990

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவிற்கு மேற்காக நாற்பத்தைந்து கி.மீ தூரத்தில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது. வீரமுனைக் கிராமத்திற்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. வீரமுனை தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறைப் பிரதேசம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் தென் கடற்கரை யோரங்களிலிருந்து போர்த்துக்கேயரால் விரட்டப்பட்ட முசுலிம்கள் இடம்பெயர்ந்து குடியேறி வாழும் பிரதேசமாகும். இவ்விரண்டு பிரதேசங்களையும் இணைத்து சம்மாந்துறை நகரசபை அமைந்துள்ளது.

1954ஆம் ஆண்டு தனிநபர்களுக்கிடையே நடைபெற்ற தகராற்றினால் சம்மாந்துறை முசுலிம்கள் ஒரு சிலரால் வீரமுனைப் பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரமுனை மக்கள் இடம் பெயர்ந்து காடுகளில் கணபதிபுரம், வீரசோலை போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள்.

1990 யூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இராணுவத்தினரால் வீரமுனைப் பிரதேசம் சுற்றிவளைக்கப்படட்து. சுற்றிவளைத்த இராணுவத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அருகிலுள்ள வீரமுனைப்பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லுமாறு பணித்தனர். ஆலயத்திற்குச் செல்லாது வீடுகளிலிருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுப் பின்னர் வீட்டுடன் சேர்த்து எரித்தார்கள் வீதிகளில் நடமாடிய பலரும் இராணுவத்தினரால் சுடப்பட்டார்கள், 20.06.1990 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு கனரக வாகனங்களில் வீரமுனைப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து இறங்கிய இராணுவத்தினர் வீரமுனைப் பிரதேசத்தில் பல பிரதேசத்திலுமிருந்து தஞ்சமடைந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்து பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோயிலின் பின் வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள், இவர்களில் அறுபத்தொன்பது இளைஞர்களை உறவினர்களின் முன்னிலைற் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையில் உள்ள மார்ஐன் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு
கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களில் ஐம்பது பேர்வரை இராணுவத்தினரால் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் உயிருடன் எரிக்கப்பட்டனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

29.06.1990 ஆம் திகதி மீண்டும் மக்கள் தங்கியிருந்த கோயிலுக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்தவா்களில் பலரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றாா்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தஞ்சமடைந்தவா்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலயத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினர் பாடசாலையிற் தங்கியிருந்தவர்களில் பதினொரு இளைஞர்களைக் கைதுசெய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள்.  இவர்களிலும் எவருமே திரும்பி வரவில்லை.

05.07.1990 மீண்டும் பாடசாலைக்கு வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்த இளைஞர்கள் பதின்மூன்று பேரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். காரைதீவு மகா வித்தியாலயத்தில் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளனார்கள். இதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதி முகாமிற்குத் திரும்பினார்கள். 10.07.1990. அன்றும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பதினைந்து இளைஞர்களைக் கைதுசெய்து, இராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அவர்களையும் உயிருடன் எரித்தார்கள்.

16.07.1990 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற பெண்களில் எட்டு இளம்பெண்கள் மல்வத்தையிலிருந்த இராணுவ சோதனை நிலையத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களும் இராணுவத்தினரால் பின்னர் எரிக்கப்படட்னர்.

26.07.1990 இல் மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் முப்பத்திரண்டு இளைஞர்களைக் கைது செய்தார்கள் இவர்களில் இருபத்துமூன்று பேர் பாடசாலை மாணவர்கள் இவர்களில் எவருமே திரும்பிவரவில்லை. 29.07.1990ல் வீரமுனைப் பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் பயணம்செய்து கொண்டிருந்த எட்டுப் பாடசாலை ஆசிரியர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள் இவர்களில் எவரும் திரும்பிவரவில்லை.

01.08.1990 ஆம் திகதி வீரமுனையிலுள்ள சவளக்கடை வீதி வழியாக நாவிதன் வெளிக்குச் சென்ற பதினெட்டு பொதுமக்கள் இராணுவம், காவற்துறை மற்றும் ஊர்காவற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு குழந்தையும் நான்கு பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் துண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோயிலுக்குள் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

12.08.1990ஆம் திகதி வீரமுனை அகதி முகாமிற்குக் கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த முசுலிம் குழு முகாமிலிருந்தவாக்ளை வெட்டியும் சுட்டும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பத்துப் பேர் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவா்களில் கோயில் அறங்காவலர் தம்பிமுத்து சின்னத்துரை, இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உள்ளடங்குவார்கள்.

12.08.1990. இல் முசுலிம்களின் தாக்குதலில் காயப்படட்வர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் மூன்று பேர் இராணுவத்தினராற் கடத்திச் செல்லப்பட்டார்கள். மிகுதி நான்கு பேர் வீரமுனைக்குத் தப்பிவந்தார்கள் .வீரமுனையில் அறுநூறு வீடுகளும் வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூரவுண், கணபதிபுரம், வலாத்தபிட்டி ,சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் ஆயிரத்து முந்நுற்று ஐம்பத்திரண்டு வீடுகளும் எரிக்கப்பட்டன. 20.06.1990 தொடக்கம் 15.08.1990. வரை வீரமுனை, காரைதீவு மற்றும் அயற்கிராமங்களிலுமாக இருநூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள். இரண்டாயிரம் வீடுகள் வரை இராணுவத்தினரால் எரிக்கப்பட்டன.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01 இளையதம்பி கணபதிப்பிள்ளை – –

02 இளையதம்பி செல்லம்மா – –
03 இளையதம்பி சின்னப்பிள்ளை – –

04 இராசையா பரமேஸ்வரி – –
05 இராசையா சுபாசினி மாணவி 16

06 இராமநாதன் வாணிதாசன் – –
07 இராமக்குட்டி பொன்னம்மா – 65

08 இராசலிங்கம் அழகையா – –
09 இருளாண்டி அமிர்தலிங்கம் மாணவன் 20

10 யு.நடராஜா – 5
11 நாகலிங்கம் தியாகராசா மேசன் 31
12 நாகலிங்கம் தவராசா – –
13 நாகலிங்கம் மாரிமுத்து – –

14 நமசிவாயம் தேவராசா – –

15 நடராஜா உதயகுமார் – 7

16 நடராசா இளங்கோ – –
17 நடராசா கிருபைராசா தொழிலாளி 39

18 நல்லதம்பி தவராசா – –
19 நல்லதம்பி கோபால் – –
20 நல்லதம்பி வடிவேல் – –
21 நல்லதம்பி விக்னேஸ்வரன் – –

22 க.கறுவல்தம்பி – –
23 க.மாரிமுத்து – –
24 க.அழகையா – –
25 கனகரெட்ணம் யோகராசா – –

26 கனகசபாபதி இளங்கோ – –

27 கந்தையா நவரட்ணம் – –

28 கந்தையா கணேசமூர்த்தி – –
29 கந்தையா கணபதிப்பிளi; ள. – –
30 கந்தையா திசாநாயக்க – –
31 கந்தையா தருமலிங்கம் – –
32 கந்தக்குடடி; பாக்கியராசா. – –
33 கந்தக்குடடி; தருமலிங்கம் – –
34 கந்தசாமி விஜயகுமார் – –
35 கந்தவனம் கநத் சாமி – –
36 கந்தவனம் குமார் – –
37 கந்தவனம் ஆறுமுகம் – –
38 கந்தவனம் சோமசுந்தரம் – –
39 காத்தமுத்து நாகேந்திரன் – –
40 காத்தமுத்து சண்முகநாதன் கமம் 40

41 காளிக்குட்டி உலகநாதன் – –
42 கதிர்காமத்தம்பி கருணாகரன் – –
43 கதிரேசப்பிளi; ள சந்திரசேகர் – –
44 கதிராமத்தம்பி இராசையா – –
45 கதிரவேலு இராசலிங்கம் கமம் –
46 கதிரவேல் இராஜேந்திரன் – –
47 கதிரவேல் ராதிகாகிருஸ்னன் – –
48 குமாரன் சின்னத்தம்பி – –
49 குலேந்திரன் அஜந்தன் – 3
50 கிருஸ்ணபிள்ளை கனகசூரியம் – –
51 கிருஸ்ணபிள்ளை மோகனராஜ் –
52 கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம் – –
53 கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி

54 கிருஸ்ணபிள்ளை விஜயகுமாரி –

55 கிருபானந்தம் அமிர்தலிங்கம் – –

56 கறுப்பையா சிவசாமி கமம் 40

57 கறுவல்தம்பி திருச்செல்வம் – –

58 கணபதி குகநாதன் – – தொழிலாளி 21 –
59 கணபதி சந்திரன் – –
60 கணபதிப்பிளi; ள இராஜேஸ்வரி – –
61 கணபதிப்பிளi; ள புஸ்பலதா – –
62 கணபதிப்பிளi; ள பரசுராமன் – –
63 கணபதிப்பிளi; ள தவராசா – –
64 கணபதிப்பிளi; ள பொன்னுத்துரை – –
65 கணபதிப்பிளi; ள சிவபாலன் தொழிலாளி –
66 கணபதிப்பிளi; ள சிவலிங்கம் சாரதி 49
67 கணபதிப்பிளi; ள சண்முகநாதன் தொழிலாளி 35

68 கணபதிப்பிளi; ள சண்முகம் – –
69 குணரெட்ணம் சிவகௌரி – –
70 பாவில் சண்முகம் – –
71 பாலன் மகேந்திரன் – –
72 பாலன் கேதரன் – –

73 பாலசுந்தரம். – –
74 பாண்டியன் முனியாண்டி – –
75 பத்மநாதன் விநாயமூர்த்தி – –
76 பழனித்தம்பி மாணிக்கம் – 46
77 பீ.ஜி.பியாந்தன் – –
78 பீ.நந்தசிறி – –
79 பி.மாரியான் – –
80 பீ.சுசிபன் – –
81 ரீ.மாதவன் – –
82 ஐயாத்துரை மகேஸ்வரன் – –
83 ஐயாத்துரை கோவிந்தன் – –
84 கைலாயபிள்ளை தேவராசா மாணவி 8
85 வை.இராசதுரை – –
86 வை.பிரான்சிஸ் – –
87 வைரமுத்து கற்பகம் – –
88 வைரமுத்து கோபாலபிள்ளை – –
89 வைரமுத்து தெய்வானை – –
90 வைரமுத்து சிவம் – –
91 தர்மலிங்கம் பொன்னத்துரை – –
92 தம்பிப்பிள்ளை இராசலிங்கம். – –
93 தம்பிப்பிள்ளை கந்தையா – –
94 தம்பிமுத்து கந்தையா கமம் 77
95 தம்பிமுத்து தயாபரன். – –
96 தம்பிமுத்து சின்னத்துரை அறங்காவலர் 52

97 தம்பிமுத்து சிந்தாத்துரை விவசாயம் 70
98 திருநாவுக்கரசு கணேசமூர்த்தி – –
99 திருநாவுக்கரசு கருணாநிதி விவசாயம் 18

100 திருநாவுக்கரசு புஸ்பராசா – –
101 தங்கநேசம் வேலுப்பிளi; ள – –
102 தங்கராசா உதயசூரியன் – –
103 தங்கராசா மனோகரன் – 18
104 தங்கராசா ராகினி – –
105 மார்க்கண்டு தங்கவேல் – –
106 மார்க்கண்டு யோகராசா – –
107 மார்க்கண்டு சிவானந்தன் – 29
108 மாசிலாமணி தருமலிங்கம் – –
109 மாசிலாமணி செல்வரட்ணம் – –
110 மாசிலாமணி விநாயகமூhத் ;தி விவசாயம் 26

111 மாணிக்கம் பாலு – –
112 மாணிக்கம் முருகேசப்பிளi; ள கமம் 21

113 மாணிக்கம் ஜெகநாதன் – –
114 முத்துலிங்கம் பாலபாஸக் ரன் – –
115 முத்துலிங்கம் பரமேஸ்வரி ஆசிரியர் 32
116 முத்துலிங்கம் செல்லையா – –
117 முருகுப்பிள்ளை தங்கரெத்தினம் – –

118 முருகுப்பிள்ளை தங்கராசா – –

119 முருகுப்பிள்ளை ஞானம்மா – –

120 மருதுரிஸ் செல்வராசா – –
121 முருகேசு உதயகுமார் – –
122 முருகேசு பாஸ்கரன் – –
123 முருகேசப்பிளi; ள பத்மநாதன் – –
124 மணியம் சோமசுந்தரம் – –
125 ஆ.யோகநாதன் – –
126 ஆர்.மயில்வாகனம் – 50
127 அம்பாரக்குட்டி தியாகராஜா – –
128 அழகையா இராமச்சந்திரன் – –
129 அழகையா சாமித்தம்பி – –
130 அழகையா சிவா – –
131 அழகையா வரீசேனன் – –
132 அழகையா ரகுநாதன் – –
133 அரசரெத்தினம் கதிரமலை – –
134 அரசரெட்ணம் மகேந்திரன் – –
135 அரசரட்ணம் வள்ளியம்மை – 58
136 அருளப்பா இந்துருஜன் – –
137 அருணாசலம் இராசரெட்ணம். – –
138 அருணாசலம் சின்னப்பிள்ளை. – 55
139 ஆறுமுகம் கநத் சாமி. – –
140 ஆறுமுகம் கலா – –
141 ஆறுமுகம் தெய்வேந்திரம் தச்சுத்தொழில் 34
142 யோகராசா கிருபானந்தி – –
143 கே.அழகையா – –
144 கே.சிவலிங்கம் – 48
145 கே.ரவிச்சந்திரன் – –
146 பொன்னம்பலம் இராஜேந்திரன் – –
147 பொன்னம்பலம் இராசமணி – –
148 பொன்னுச்சாமி கநத் சாமி தொழிலாளி 24
149 பொன்னுச்சாமி கணேசமூர்த்தி ஆசிரியர் 26
150 பொன்னையா உதயகுமார் – –
151 பொன்னையா மகேஸ்வரன் – –
152 பொன்னையா வள்ளியம்மை – 67
153 தேவநாயகம் மகேந்திரன் – –
154 சொலமன் சகாயநாதன் – –
155 செல்லையா கிருஸ்ணபிள்ளை – –
156 செல்லையா அசோகன் மின்சாரசபை ஊழியர் 24
157 செல்லையா சோமசுந்தரம் – –
158 செல்லையா வடிவேல.; – –
159 செல்வன் சிவநாதன் – –
160 செல்லன் அருளம்மா – –
161 செல்லத்துரை தர்மலிங்கம் – –
162 செல்லத்தம்பி கருணாநிதி கடதாசி ஆலை ஊழியர் 24

163 வெள்ளையன் மாணவன் 7
164 வேல்முருகு முத்து – –
165 வேலுப்பிள்ளை நாகேந்திரன் – –
166 வேலுப்பிள்ளை காசியானந்தன் – –
167 வேலுப்பிள்ளை கதிரமலை – –
168 வேலுப்பிள்ளை திருச்செல்வம் தொழிலாளி 22

169 வேலுப்பிள்ளை யோகராசா – –
170 வேலுப்பிள்ளை தெய்வநாயகம் – –
171 வேலுப்பிள்ளை சந்திரகுமார் – –
172 வேலுப்பிள்ளை சுதாகரன் – –
173 ரெட்ணம் செல்வராசா கமம் 20
174 சு.மனோகரன் – –
175 சந்திரன் அருளப்பன் – –
176 சுப்பிரமணியம் நடேஸ்வரன் – –
177 சாமித்தம்பி கணபதிப்பிள்ளை – –
178 சாமித்தம்பி குணசலீ ன் – –
179 சாமித்தம்பி தங்கவேல் மாணவன் 17
180 சாமித்தம்பி சுப்பிரமணியம் – –
181 சதாசிவம் புவனேந்திரன் – –
182 சதாசிவம் தேவராசா விவசாயம் 18
183 சின்னத்துரை காளிக்குட்டி – –
184 சின்னத்தம்பி குகதாஸ் – –
185 சின்னத்தம்பி திலகேஸ்வரி – –
186 சின்னத்தம்பி அண்ணாதாசன் – –
187 சின்னத்தம்பி வன்னியசிங்கம் – –
188 சின்னதம்பி ரவிச்சந்திரன் சாரதி 22
189 சின்னையா முத்தையா – –
190 சீனி  இந்திரன் – –
191 சீனி தவசீலன் – –
192 சீனி ஜெயசீலன் – –
193 சீனித்தம்பி மாரிமுத்து – –
194 சீனித்தம்பி வேல்முருகு – –
195 சித்தாத்துரை காளிக்குட்டி கமம் 47
196 சித்தாத்துரை செல்வராசா – –
197 சித்தாத்துரை சம்பந்தன் விவசாயம் 24
198 சித்தாத்துரை தவராசா – –
199 சித்தாத்துரை தேவராசா
200 சித்தாத்துரை வேவி – –
201 சித்தாத்துரை சம்மந்தன்
202 சித்திரவேல் பத்மநாதன்
203 சிவனடியார் ரவிச்சந்திரன் – –

204 சிவானந்தன் இந்திரன் – –
205 சிவானந்தன் பாலசச் ந்திரன் – –

206 சிவானந்தன் ரவிச்சந்திரன் – –

207 சிவஞானம் கணேசன ; – – விவசாயம் 24 – –

208 சிவசம்பு தேவராசா – –
209 சங்கரப்பிள்ளை அற்புதராசா – –
210 சங்கரப்பிள்ளை வில்வராசா விவசாயம் 20
211 சலமன் மோகனராஜன் சகாயநாதன் வியாபாரம் 22

212 சண்முகம் இளஞ்சேகர் மாணவர் –
213 விநாயகமூர்த்தி பாலு – –

214வீரக்குட்டிகிட்ணன்–
215 வீரபாண்டியன் ஜமுனா
216 வள்ளியம்மை – –
217 ராமன் – –
218 ரவி தில்லையம்மா – –
219 ஏ.ஈ.தேவதாசன் – –
220 ஏ.கனகரெத்தினம் – –
221 ஏ.பரமநாதன் – –
222 ஏ.முருகேசபிள்ளை – –
223 ஏ.சுபாசினி மாணவி 17
224 ஏ.சின்னப்பிள்ளை – 50
225 ஏ.சித்திரவேல் – –
226 ஏ.சிவநேசன் – –
227 ஏ.ஏ.சண்முகவேல் – –
228 எஸ்.மாணிக்கம் – 35
229 என்.இராசன் – –
230 என்.சந்திரகுமார் – –
231 ஏகாம்பரம் தருமலிங்கம் – –

232 எம்.முத்துக்குமார்–
233 எம்.அருள்மணி – –

வீரமுனையில் வேறு தினங்களில் உயிரிழந்த சிலரது விபரங்கள் (பெயர் தொழில் வயது)
01 15.03.1985 சதாசிவம் சண்முகராஜா கமம் 23
02 25.10.1985 சின்னத்தம்பி நவரட்ணராசா விவசாயம் 19
03 08.09.1988 காளிக்குட்டி நவரெட்ணம் தொழிலாளி 23
04 13.01.1989 சேதுமதி குணரட்ணம் கமம் 33
05 11.06.1990 கணபதிப்பிள்ளை கந்தசாமி தொழிலாளி 27
06 15.06.1990 பாலசந்திரபோஸ் சுபாஸ்சந்திரபோஸ் தொழிலாளி

16 07. செல்லத்துரை விக்னேஸ்வரன் கமம் 21
08. செலடன்ஸ்பெக் பிறிங்கேஸ்பெக் தச்சுத்தொழில் 19
09. சிவராசா சதீஸ்குமார் – 19
10. சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் மாணவன் 18
11. சவரிமுத்து ரஞ்சன் கமம் 22
12. சற்குணநாதன் ரஞச்சிதகுமார் வியாபாரம் 22

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments