
புலிகளின்குரல் வானொலி நிலையம் குண்டுவீச்சு – 27 நவம்பர் 2007
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களின் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், பொது நூலகம் என்பனவற்றின் மீது கடந்த 27.11.2007 அன்று மாலை 4.30மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அயலவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் என 10பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10பேர் படுகாயமடைந்தனர்.
புலிகளின் குரல் வானொலி நிலைய உபகரணங்கள் பலத்த சேதத்துக்குள்ளாகின. தமிழரின் மாவீரர் தினமான அன்று புலிகளின் குரல் வானொலி நிலையம் இந்நிகழ்வுகளை தமிழருக்கு ஒலிபரப்பும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தது. இத்தாக்குதலைக் கண்டித்து ருNநுளுஊழு அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()