×

ஊர் நோக்கி – நெடுந்தீவு

நெடுந்தீவு யாழ்குடாநாட்டுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவாகும். நீண்டகால தமிழர் வரலாற்றைக் கொண்ட தீவாக நெடுந்தீவுள்ளது. யாழ்குடா நாட்டை சுற்றியுள்ள தீவுகளில் நீண்ட தீவாக நெடுந்தீவு காணப்படுவதால் நெடிய தீவு நெடுந்தீவு என பெயர் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. யாழ்பாணத்தில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதாலும் நெடுந்தீவு என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நெடுந்தீவை Delft என்று அழைத்தார்கள். அது ஆங்கிலத்திலும் நெடுந்தீவை Delft Island என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

நெடுந்தீவு யாழ்பாணத்தில் இருந்து 45 கிமீ தொலைவிலும் இந்திய இராமேஸ்வரத்தில் இருந்து 38 கிமீ தெலைவிலும் உள்ளது.

வடக்கு தெற்காக 6 கிமீ கிழக்கு மேற்காக 8 கிமீ மாகவும் 30 கிலோமீற்றர் சுற்றலiவுயும் மொத்த நிலப்பரப்பு 45சதுர கிலோ மீற்றராகக் கெண்டது நெடுந்தீவு.

நெடுந்தீவு ஒரு வரலாற்றுக்கு முற்பட்ட தீவாகக் காணப்படுகிறது. இத்தீவின் னபசுந்தீவு, தலைத்தீவு, அபிசேகத்தீவு, தயிர்தீவு, பால்தீவு என அழைக்கப்படுகிறது. இத்தீவு ஒரு கால்நடை வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் கடல் பொருட்கள் வளத்திலும் சிறந்து விளங்கியுள்ளதை இப்பெயர்கள் அடையாளப்படுத்துகின்றது. வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் 1813 ம் ஆண்டு ஜக்கிய அமேரிக்க இளைஞன் இத் தீவின் வளத்தையும் அழகையும் பார்த்து இத் தீவு ஒரு நாட்டுக்கு சொந்தமானது இல்லை. இது பிரபஞ்சத்துக்கு சொந்தமான தீவு எனக் குறிப்பிடுகிறார். அவ்வளவு அழகும் வளமும் கொண்ட தீவு நெடுந்தீவாகும்.

இங்கே நெல் சிறுதானியங்கள் கோதுமை வயல்களும் சணல் பெருக்கு பாலை தென்னை பனை  போன்ற வளமும் மூலிகைச் செடிகளும் கடல் வளமும்  நிறைந்த ஊராக இருந்தது நெடுந்தீவு காணப்பட்டது.

இந்த நெய்தல் தீவில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறும் பல என்றாலும் தமிழர் இரத்தம் கடலில் சிவந்த வரலாறும் இங்கே உள்ளது.

மன்னர் சேகராசசேகரன் இத்தீவை மருந்து மாமலை வனம் என இத்தீவை போற்றியுள்ளார். இத்தீவு ஒல்லாந்தர் ஆட்சிக்கு முன்னர் தனி இராட்சியமாக தனக்கென அரசமைத்து ஒரு சுதந்திர நாடகவே இருந்தது. இறுதியாக வெடியரசன் என்னும் மன்னன் நெடுந்தீவுக்கு மேற்கே கோட்டைகாடு என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு கோட்டை கட்டி ஆண்டு வந்தான். ஆண்ட வரலாற்றுத் தடங்கள் நெடுந்தீவில் உள்ளது. வெடியரசன் கோட்டை இதில் குறிப்பிடத்தக்கது வணங்காமண் தமிழர் நாடுகளில் நெடுந்தீவு என்னும் இந்த நாடு தனியாக இருந்த போது ஒல்லாந்தர் ஆக்கிரமித்து பின்னர் ஆங்கிலேயர் ஆண்டுவந்தனர். ஈழப் போர்காலத்தில்  இலங்கை இரணுவம் ஆக்கிரமித்த போது பலர் இங்கிருந்து இடம்பெயர்ந்து யாழ்பாணம் மற்றும் பல இலங்கையில் உள்ள இடங்களிலும் இந்தியா மற்றும் ஜரோப்பிய கனடா நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.

இங்கு காணப்படும் பாவோகாப் எனப்படும் பெருக்கு மரம் ஏழாம் நூற்றாண்டில் அரபிய வியாபாரிகளால் இங்கு கொண்டுவரப்பட்ட மரமாகும். பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மரம் குகை போன்ற அமைப்பில் காட்சிதருகிறது. பலர் உள்ளே நிற்க கூடிய வசதியுள்ளது. இதைக் காண பல சுற்றுலா பயணிகள் வருவது வழமை. இங்கே வெடியரசன் கோட்டை ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் அடையாளச் சின்னங்கள் பல காணப்படுகின்றது.

மேலும் நெடுந்தீவு குதிரைகளுக்கு பிரசித்திபெற்ற இடமாகும். கோவேறு கழுதைகள் அதாவது அரசர்;கள் ஏறும் கழுதைகள் இங்கு உள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொகென்ஸ் இந்த தீவில் தங்கியிருந்த போது கப்பல் மூலமாக இவ் குதிரைகளை இங்கு கொண்டுவந்தார். 1660  தொடக்கம் 1675 இதற்கு பின்னர் 19 ம் நூற்றாண்டில் பிரித்தானியரான நோலான் மூலம் பாதுகாக்கப்பட்டன. இங்கிருந்து இந்த குதிரைகளை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற சட்டமும் உள்ளது.

மீகாமன் என்னும் மன்னனுக்கும் வெடியரசன் மன்னனுக்கும் பெரும் போர்  நெடுந்தீவில் நடந்ததாக வரலாற்றுச்சான்றுகள் உள்ளது.

நெடுந்தீவில் பண்டைக்காலத்தில் தென்னிந்தியாவுக்கு கடல் வழித்தொடர்பு இருந்துள்ளது. பெரியதுறை என்னும் துறைமுகம் இதற்காகப் பயண்படுத்தப்பட்டுள்ளது. கடல்வெளிப் பயணத்துக்காக மாவிலித்துறைமுகம் தாளைத்துறைமுகம் குடுவிலித்துறைமுகம் குவிந்துறைத்துறைமுகம் வெல்லாதுறைமுகம் காணப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்தில் பெரியதுறை முகத்தில் இந்;தியா செல்வதற்கு தடைவிதிக்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

நெடுந்தீவு என்றதும் தமிழ் மக்களின் கண்களில் கண்ணீர் வரவகை;கும் பல சோகக் கதைகளும் உள்ளன. நெடுந்தீவில் இருந்து 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சென்ற குமுதினிப் படகை மறித்து ஏறிய இலங்கை இராணுவம் படகில் இருந்த குழந்தைகள் முதல் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நெடுந்தீவில் உள்ள ஊர்கள்:

  1. ஆலங்கேணி
  2. பெரியான்துறை
  3. மாவலித்துறை
  4. பூமுனை
  5. சாமித்தோட்டமுனை
  6. வெல்லை
  7. குந்துவாடி
  8. தீர்த்தக்கரை

– வட்டக்கச்சி

– வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments