
அகவணக்கம்..! 🔴🟡
ஈழத்தமிழர் நடாத்தும் பொது நிகழ்வுகளிலும், மாவீரர் வணக்க நிகழ்வுகளிலும் தமிழில் அகவணக்கம் கூறி நிகழ்வு தொடங்கப்படுவதே வழமை. ஆனால் தமிழில் கூறப்படுகின்ற அகவணக்கத்தின் பொருளும் வரலாறும்; வேற்றுமொழிமூலமாகச் சொல்லப்படுகின்ற அகவணக்கத்தில் முழுமையாக இருப்பதில்லை.
தமிழ்மொழியில் சொல்லப்படுகின்ற அகவணக்கத்தின் பொருளும் வரலாறும், வேற்றுமொழியில் சொல்லப்படுகின்ற அகவணக்கத்திலும் முழுமையாக இருக்குமிடத்து, வேற்றுநாட்டவர்கள் எமது வரலாறையும் போராட்டத்தையும் தெளிவாக அறிந்துகொள்ள ஏதுவாக அமையும்.
ஆதலால் தமிழில் எவ்வாறு அகவணக்கம் சொல்லப்படுகிறதோ, அதே பொருள்சுமந்த சொல்லாடல்களோடு அகவணக்கத்தை வேற்றுமொழிகளுக்குப் பெயர்த்திருக்கிறோம். இனிவரும் காலத்தில், வேற்றுநாட்டவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கீழ்வருமாறு அகவணக்கத்தைத் தமிழிலும் பின்னர் அந்நாட்டுக்குரிய மொழியிலும் கூறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
”தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா இந்திய படைகளாலும், இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், நினைவுகூர்வோமாக.
முடிக்கும் போது – நிறைவு செய்வோமாக