
இன்றிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தமிழர் தம் பெரும் அடையாளமாக விளங்கிய தமிழ்ப்பேரரசர் இராசேந்திர சோழரின் பொற்கால ஆட்சியில் நீர் மேலாண்மை, உழவு, உலோக தொழில், கலை, பண்பாடு, மக்கள் நலன் போன்ற பலவற்றில் சிறப்புப் பெற்று, ஈழத்திலே தமிழரின் வரலாற்றில் உச்சம் பெற்ற தலைநகராய் கொடிகட்டிப் பறந்த ஊர் பொலன்னறுவையாகும். சோழர் காலத்தில் புலை நரியான ஜனநாத மங்களம் என்று அறியப்பட்ட இவ்வூரின் மரபும் வரலாறும் மிகச் சிறப்புடையது.
ஈழத்தமிழர் வரலாற்றில் மிக முக்கிய நகரான இவ்வூரில் உள்ள தமிழர் மரபு சின்னங்களைப் பாதுகாக்கும் பொருட்டும், தமிழரின் செழுமையான மொழி, மரபு மற்றும் பண்பாட்டை ஊக்குவித்தும் பொலன்னறுவை வாழ் சகமக்களுடனான நல்லிணக்க போக்குடனும் சமூக முன்னேற்றத்திற்காகவும் தமிழரின் இருப்பை உறுதி செய்யவும், அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழி, மரபு, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் “பொலன்னறுவை தமிழ்ச் சங்கம்” என்ற இவ்வமைப்பை உருவாக்கியுள்ளோம் என்பதைப் பெருமகிழ்ச்சியுடனும் பொறுப்புடனும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதுடன் உங்கள் அனைவரின் பேராதரவையும் வேண்டிக்கொள்கிறோம்.
இப்படிக்கு பொலன்னறுவை வாழ் தமிழ் மக்கள்,
பொலன்னறுவை தமிழ்ச் சங்கம்.