
தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும். சிறிய நிலப் பரப்பைக் கொண்ட வடமராட்சிப் பிரதேசத்தில் 8000 க்கு மேற்பட்ட ராணுவத்தினரால் நூற்றுக்கு மேற்பட்ட கனக ரக ராணுவ வாகனங்களும் பல உலங்கு வானூர்திகளும், குண்டு வீச்சு விமானங்களும் சிறிலங்கா கடற்படையினரின் கடல்படை படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சுற்றிவளைத்து கோரத் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். 15000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு ஏதிலிகள் ஆக்கப்பட்டனர். இத்தாக்குதலை முறியடிப்பதற்காக தேசிய தலைவர் வே. பிரபாகரன் வழிகாட்டலில் 200 வரையிலான போராளிகள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் சமரில் 8 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.