தம்பிக்கு நித்திலாவின் கடிதம்
25.02.1989
அன்பின் நவீனன் அறிவது,
நலம். உனது கடிதம் கிடைத்தது. உனக்கு பயிற்சி முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை உனக்குப் புதிது. பல கஸ்டங்களைச் சந்தித்திருப்பாய், ஆனால் இவற்றைத் தாங்குகின்ற மனசக்தி இருந்தால் தான் உன்னால் உறுதியாகப் போராட முடியும். உனக்குப் பொறுப்பாகவுள்ளவர்கள் சொல்வதைக் கேட்டு நட. எல்லோரிடமும் அன்பாய்ப் பழகு. உனது எழுத்தை விளங்கக்கூடியதாய் எழுதினால் மட்டும் காணாது, வடிவாய் எழுதப்பழகு.
நான் பாமாவைச் சந்திக்கிறனான். மற்றவர்களைச் சந்திக்கவில்லை. உன்னைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எனது காட்டு வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு எழுதிறதைத் தவிர்த்துக்கொள்.
நீ வீட்டைப்பற்றி ஒன்றுக்கும் யோசிக்காதே. மிகுதி சந்திக்கும் போது கதைப்போம்.
இப்படிக்கு
நித்திலா.