கண்ணைக் கொடுத்து உயிரைக் கொடுத்து மண்ணைக் காத்த சிறை மறவர். பெயர் : செல்வராசா யோகச்சந்திரன் ஊர் : வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இவர், இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தனது இறுதி விருப்பம் என, “எனது மரண தண்டனையை நிறைவேற்றும் முன், எனது கண்களை எடுத்துப் பார்வையற்ற தமிழர் ஒருவருக்கு பொருத்துங்க. நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும் “ என்று கூறினார்.
கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிங்களக் காடையர்களால் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டுக் காலினால் மிதித்துச் சிதைக்கப்பட்டு மிகக் கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இவரின் கொடூர மரணம் தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.