பொது அறிவுறுத்தல்கள்
1. இவ் அட்டையானது தங்களது விண்ணப்பத்திற்கு அமைவாகவே வழங்கப்படுகிறது. அவ்விண்ணப்ப தரவுகளை மூலமாக கொண்டு கமத்தொழில் காணிகளிற்குறிய காணிப்பதிவேடு ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கும். அது தங்கள் காணிகளின் அடிப்படை விபரங்கள் அனைத்தையும் கொண்டதாக அமையும்.2.
2. கமத்தொழில்காணிப் பதிவேடானது ஓவ்வொருவருடமும் குறிப்பிடப்படும் காலங்களில் செவ்வைசெய்யப்படும். அவ்வேளையில் தமது காணிப்பதிவுகளில் வழுக்களோ, விடுபாடுகளோ சேர்வுகளோ இருப்பின் அவற்றை சரி செய்து கொள்ளல் வேண்டும்.
3. இவ் அட்டையானது வழங்கப் பெற்ற திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும். அதன் பின்னர் வருடாவருடம் யூன் 01 தொடக்கம் யூலை 31க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புதுப்பிக்கப்படல் வேண்டும்.
4. இவ் அட்டையானது காணி தொடர்பான சட்ட ஆவணமாக பயன்படுத்தக் கூடியதொன்றல்ல.
5. காணிச்செய்கையாளர் மாறும் போது முன்பு அக்காணியில் பயிர்ச் செய்கை மேற்கொண்டவர் பிறிதொரு செய்கையாளருக்கு வழங்கும் போது தாம் செய்கை பண்ணும் காணியை குறிப்பிட்ட செய்கையாளருக்கு வழங்குகின்றேன் என்பதையும் கி.சே. பிரிவு, கிராமம், காணிப் பெயர், பரப்பளவு, போகம் (செய்கைப் பண்ணும் காலம்) போன்ற விபரங்களையும் எழுத்து மூலம் உறுதிப்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
6. செய்கையாளர் மாறும் போது பதிவுகள் அனைத்தும் உடனுக்குடன் மேற் கொள்ளப்படாவிடின் அப்பயிர் செய்கைக்கு எவ்வித உள்ளீட்டுப் பொருட்களும் கிடைக்கப் பெறாது.
7. இதில் ஏற்படும் தவறுகள் சீர்கேடுகளை கிராமிய உற்பத்திக் குழு ஊடாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது த. பொ. மே. நிறுவன வட்டப்பதிவாளரூடாக மாவட்டப் பதிவாளருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
8. இவ் அட்டையினை பத்திரமாக பேணிப் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். இவ் அட்டையை இழக்க அல்லது சேதமேற்பட நேர்ந்தால் தாங்கள் குறிப்பிடும் உண்மை நிலை குறித்து வட்டத் தொடர்பாளருக்கு கி. உ. குழு மூலம் உறுதிப்படுத்தும் பட்சத்தில் இதன் இணைப்பிரதியை ரூபா 30 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
9. அரச சார்பற்ற நிறுவனங்களுடாக பெறப்படும் அனைத்து விவசாய உள்ளீட்டுப் பொருட்கள், உபகரணங்கள், கடன்கள், மற்றும் கால்நடைச் சிகிச்சைகள் போன்றன இவ் அட்டையில் பதியப் பட்டிருத்தல் வேண்டும்.
10. இவ் அட்டையினை கைமாற்றம் செய்வது, விற்பனை செய்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
தமிழீழம் இயற்கை
வளங்கள் நிறைந்த பூமி
இந்த வளங்களை இனம் கண்டு
உள்ளுர் உற்பத்திகளை
விருத்தி செய்து மக்களின் தேவைகளை
பூர்த்தி செய்யும் பொருளாதாரப் பணியில்
தமிழீழ மக்கள் பங்குகொள்ள வேண்டும்
வே. பிரபாகரன்
தமிழீழத் தேசியத் தலைவர்.