×

திருக்குறள் அறிமுகம்

திருக்குறள்

தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.

அறத்துப்பால்

அறத்துப்பாலில் மொத்தம் 4 இயல்கள் உள்ளன. இதில் முதலாவது இயல் “பாயிரவியல்”. பாயிரவியலில் மொத்தம் 4 அதிகாரங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாவது இயலாக “இல்லறவியல்” உள்ளது. இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து “துறவறவியல்” உள்ளது. அதில் மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஊழியல்”. இதில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே. அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்களும் 380 பாடல்களும் உள்ளன.

பாயிரவியல் – 4 அதிகாரங்கள்

இல்லறவியல் – 20 அதிகாரங்கள்

துறவறவியல் – 13 அதிகாரங்கள்

ஊழியல் – 1 அதிகாரம்

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Thirukural with meaning

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments