×

துறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் துறைநீலாவணைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் விவசாயத்தினையும், மீன்பிடியினையும் தமது பிரதான தொழிலாகக் மேற்கொண்டு வருகின்றார்கள்.

12.08.1990 அன்று காலை நீலாவணை, கல்லாறு  இராணுவ முகாம்களிலிருந்த இராணுவத்தினர் துறைநீலாவணைக் கிராமத்தினைச் சுற்றிவளைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வயது வேறுபாடின்றி வீடுகளிலிருந்தவர்களும், வீதியாற் சென்றவர்களுமாக அறுபதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பல பொதுமக்கள் காயமடைந்தார்கள்.

12.08.1990 அன்று துறைநீலாவணைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இளையதம்பி மனோகரன்
  2. இராசதுரை சிவானந்தராஜா (வயது 27)
  3. நவரட்ணகா சுமதி (வயது 28)
  4. நல்லதம்பி செல்வராசா (வயது 35)
  5. கந்தையா சிவானந்தன்
  6. கந்தக்குட்டி சுப்பிரமணியம் (வயது 40)
  7. கந்தக்ளகுட்டி திலகநாதன் (வயது 20)
  8. கணேஸ்தாஸ் சதாசிவம் (வயது 25)
  9. கண்மணி கிருபாகரன் (வயது 21)
  10. பூபாலப்பிள்ளை நிமலநாதன் (வயது 21)
  11. பாக்கியவதி அப்புத்துரை (வயது 35)
  12. பழனிவேல் பாக்கிராசா (வயது 28)
  13. வைரமுத்து உதயராஜா (வயது 20)
  14. வைரமுத்து செல்வராசா (வயது 15)
  15. வைரமுத்து சுதாகரன் (வயது 20)
  16. தம்பியப்பா நவரத்தினமூர்த்தி (வயது 28)
  17. தம்பிமுத்து அழகம்மா (வயது 33)
  18. தட்சணாமூர்த்தி சுதாகரன் (வயது 20)
  19. தினேஸ்குமார் உதயகுமார் (வயது 18)
  20. தங்கராசா ஆறுமுகம் (வயது 40)
  21. மகாலிங்கம் தம்பியப்பா (வயது 35)
  22. மாணிக்கம் குழந்தைவேல் (வயது 38)
  23. மகேஸ்வரன் சுதாகரன் (வயது 24)
  24. அ.ரவிச்சந்திரன்
  25. அழகுதுரை கிருஸ்ணபிள்ளை (வயது 40)
  26. அழகையா கமலநாயகி (வயது 23)
  27. பொன்னம்பலம் சின்னவன் (வயது 28)
  28. பெரியதம்பி இராசலட்சுமி (வயது 20)
  29. செம்பன் கதிரேசு
  30. வேலுப்பிள்ளை பாக்கியநாதன் (வயது 28)
  31. ச.சிவமோகன் (வயது 18)
  32. சுந்தரம் கனகசபை (வயது 38)
  33. சாமித்தம்பி சிவஞானமூர்த்தி
  34. சதாசிவம் சுகுமார் (வயது 22)
  35. சின்னத்தம்பி மகேஸ்வரி (வயது 28)
  36. சின்னத்தம்பி செல்லத்துரை
  37. சின்னமுத்து அன்னம்மா (வயது 45)
  38. சிவஞானமூர்த்தி சரோசினி (வயது 14)
  39. சிறிதரன் சிறீகாந்தராஜ்
  40. வடிவேல் சந்திரகுமார் (வயது 28)
  41. விஜயபால குணபால
  42. விஸ்வலிங்கம் லூத்துமேரி (வயது 21)
  43. வீரமலை சுவீராஜன் (வயது 23)
  44. வீரமலை சண்முகதாசன் (வயது 25)
  45. ரத்தினம் சுவேந்திரன் (வயது 20)
  46. ரவிக்குமார் ராஜபுத்திரன் (வயது 18)
  47. வேலுப்பிள்ளை பேரின்பநாயகி (வயது 21)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments