×

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09)

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09)மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வடக்குத்திசையாக அமைந்துள்ள கிராமமே சத்துருக்கொண்டான்.

1990 இன் ஆரம்பத்தில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் இக்கிராமத்து மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். முற்றுமுழுதாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இக்கிராமத்தில் பாரிய இராணுவமுகாமானது சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது. பின்னர் மக்களை மீள் குடியேறுமாறு இராணுவத்தினர் அழைத்தார்கள்த. அதனை நம்பி குடியேறச் சென்ற அனைத்து மக்களையும் 1990.09.09 அன்று இராணுவமும், இசுலாமிய யிகாத் மற்றும் ஊர்காவற்படையினரும்  இணைந்து கைது செய்து படுகொலை செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 85 பெண்கள் உள்ளடங்குவர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினராலும், யிகாத்துக்களாலும் கற்பழிக்கப்பட்டு அவர்களின் மார்பகங்கள், கை, கால்கள் என்பவை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 குழந்தைகள் உட்பட 68 சிறுவர்களும் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
கிட்டத்தட்ட 17 ஆண்கள், உறுப்புக்கள் வெட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர்.

மொத்தமாக 205 பேர் சத்துருக்கொண்டான் படுகொலையில் கொல்லப்பட்டனர்.

சிறிலங்கா இராணுவத்தின் மற்றுமொரு இனவழிப்பு அரங்கேற்றப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலையை கண்ணீரோடு நினைவு கூருகின்றோம்.
கொல்லப்பட்ட எம் உறவுகளை எம் நெஞ்சில் நிறுத்தி வணங்குகின்றோம்.

”மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்”

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments