விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில். தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின்
காலம்.
வீடுகளும். தோட்டங்களும். தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு. பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.
1990ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாரிய முன்னேற்ற முயற்சியொன்றை படையினர் மேற்கொண்டனர். கப்டன் அஜித்தாவின் வழிநடத்தலில் பெண் போராளிகள் நான்குமணி நேரமாக எதிர்ச்சமராடி முன்னேற்ற முயற்சியை முறியடித்தனர். எதிரிகள் பலரை வீழ்த்தியதோடு, எம் – 203 பிஸ்ரல் உட்பட வேறுசில ஆயுதங்களையும், ஒரு இராணுவத் தின் சடலத்தையும் கைப்பற்றினர். முதன் முதலாக தனித்துப் போரிட்டு, பகைவரின் ஆயுதம் எடுத்த சமரைத் தலைமையேற்று நடத்திய பெருமை கப்டன் அஜித்தாவுக் குரியது.