உடப்பு
உடப்பூர் அல்லது உடப்பு என்னும் ஊர் இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய தமிழ் கிராமமாகும். மிகத் தென்மையான வரலாற்றுக் கதைகளுடன் தெடர்புபட்ட ஒரு ஊராகும்.
கர்ண பரம்பரைக் கதைகள், தொன்மையான வரலாற்றுக் கதைகள், கிராமியத் மரபுவழி பாரம்பரியத்தோடு காணப்படும் ஒரு கிராமம் உடப்பு ஆகும்.உடப்பூர் சிலாபம் நகரில் இருந்து பதினோராம் மயில் கல் தொலைவில் அமைந்துள்ளதே உடப்பூர். இங்கு இருபத்தையாயிரத்துக்கு அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள். சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் என மும்மத ஒற்றுமையோடு தமிழ் மனம் வீசும் கிராமம் உடப்பூர் ஆகும்.
இங்கு ஓர் பூசந்தியுள்ளது. இது சிலாபத்தையும் கற்பிட்டிக் குடாவையும் இணைக்கும் சந்தியாகும். பெரும் வெள்ளம் வரும் காலத்தில் இப் பூச்சந்தி மணல்மேடு வெட்டப்படும். இதனால் இவ் ஊர் மக்கள் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப் படுகின்றனர். வெள்ளம் அறுத்துப் பாய்வதினால் அறுவாய் என அழைப்பார்கள். உடைத்து விடும் இடத்தை உடைப்பு என அழைத்து வந்து அச்சொல் மருபி உடப்பு, உடப்பூர் என அழைக்கப்படுகின்றது.
இப் பூச்சந்தியை மையமாகக்கொண்டு உடப்புக் கிராமம் வட பகுதியை வட உடப்பு எனவும் தென் பகுதியை தென் உடப்பு எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கிராமத்தின் மேற்கே இந்து சமுத்திரமும் கிழக்கே முந்தல் கடல்நீரேரியும், அத்தோடு ஒல்லாந்தர் வெட்டுவாய்க்காலும் வடக்கே ஆண்டிமுனை கிராமமும், தெற்கே பிங்கட்டி ஆகியன எல்லைகளாகக் கொண்டிருக்கின்றன.
வடமேல் மாகாணத்தில் கற்பிட்டி தொடக்கம் நீர்கொழும்புவரை தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியாம். இப் பிரதேசங்கள் யாழ்பாண இராசதாணியின் கீழ் ஆட்சியில் இருந்தற்கு வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றது.
சரித்திர காலத்துக்கு முன்னே தமிழர்கள் வாழ்ந்த இடமாக உடப்பு காணப்படுகிறது. கர்ண பரம்பரைக் கதைகளும் இங்கு காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களும் இதற்கு சான்றாகும்.
தட்சணகைலாய புராணத்தில் கூறப்பட்டுள்ள பழம்பெருமைவாய்ந்த முன்னேச்சர ஆலயம், அதை அடுத்துள்ள மானாவேரி சிவன் ஆலயமும் இப்பகுதியில் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் ஆகும். மேலும் ANCIENT JAFFNA என்ற நூலில் முதலியார் இராசமாணிக்கத்தால் இக் கூற்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னர் புத்தளம் மாவட்டம் தமிழர்களின் சிறப்பை அதன் பெருமைகளையும் இருப்பையும் கூறும் மாவட்டமாகத் திகழ்ந்தது. இன்று எதிர்மறையான தற்பரிமானத்தையும் தமிழர் தமது இருப்பை இழக்கும் அபாயத்திலும் உள்ளது. ஆனால் உடப்பு கிராமம் தமிழர் தம் பெருமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் போற்றி பாதுகாத்து வரும் ஒரு கிராமமாக உடப்பு காணப்படுகிறது.
உடப்பு என்றவுடன் பேசப்படும் பொருளாக இங்கு காணப்படும் துரோபதை அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு திருவிழாவும், உடப்பில் பிரபலமான தமிழர் கலைவடிவத்தில் ஒன்றான வில்லிசையும் மிகவும் பிரபலமானது. வில்லிசையில் பெரி சோமஸ்கந்தரின் வில்லிசை இலங்கையில் உடப்பின் கலைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது.
உடப்பு மண்ணின் பிரபலங்கள்
க. வேலாயுதம் சம்மாட்டியார்
வை. சின்னத்தம்பி அதிபர்
ந. சிற்றம்பலம் கிராம சபைத் தலைவர்
பூவடப்பன் ஆசிரியர்
முத்தையா பூசகர் உடப்பு துரௌபதை அம்மன் ஆலயம்
மூக்குத்தி ஆறுமுகசாமி கிரமசபை உப தலைவர்
முத்தையா சொக்கலிங்கம் அதிபர் ( திருமணப் பதிவாளர், சமாதான நீதவான்)
ஓடிட்டர் வீரவேலாயுதம் பண்டிதர்
வீ. மாயாண்டி அதிபர்
முத்துதம்பி இராசலிங்கம் திடீர் மரணவிசாரணை அதிகாரி
ஜயமுத்து விதானை வைரவசுந்தரம் ஆசிரியர்
எஸ். நல்லைவரன் கிராமாட்சி சபை உத்தியோகத்தர்
எஸ். மாரிமுத்து சமாதான நீதவான்
இராமலிங்கம் ஜயாத்துரை சமூகசேவையாளர்
சேதுபதி சிவசோதி கிராமோதய சபைத்தலைவர்
சேதுபதி ஜெயராமன் செம்பலிங்கம் மரணவிசாரணை அதிகாரி
மாரிமுத்து பூவையா பிரதேச சபைத் தலைவர்
க. தட்சணாமூர்த்தி பிரதேச சபைத் தலைவர்
மு. இராமநாதன் சமாதான நீதவான்
முத்துராக்கு சிறிமுருகன் பாடகர் நடிகர் கல்வியளாலர்
சிற்றம்பலம் திலகவதி பதிவாளர்
மு. செல்லையா கிராமசேவையாளர்
க. மகாலிங்கம் பிரதேசசபை உறுப்பினர்
மாரிமுத்து கமலவாசகன் பிரதேசசபை உறுப்பினர்
வேலுப்பிள்ளை சிவபாலன் சமாதான நீதவான்
வைரவா கனகரத்தினம் சமாதான நீதவான்
வைரவா சபாரத்தினம் பிரதேச செயலாளர்
ஜ. வேலன் சம்மாட்டி கிராம சேவையாளர்
இலாபமுத்து இராமச்சந்திரன் சமாதான நீதவான்
திரு கதிர்காமுத்தையா கூத்துக் கலைஞர்
துத்துராக்கு சின்னாண்டி வைத்தியர்
திரு கந்தவடிவேல் வைரையா தலைமை ஆசிரியர்
வட்டக்கச்சி
வினோத்
ஊசாத்துணை
கதைசொல்லும் உடப்பு ( உடப்பூர் வீரா சொக்கன்)
வீரகேசரி
இணையம்