திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சே குவேரா , பிடல் காஸ்ட்ரோ,யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகள், உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார் .
பயணம் தொடரும்…..
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.
In English