தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர்நாள் நிகழ்வுகள் மாலை 6;05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதுடன் அகவணக்கத்தை தொடர்ந்து சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் பிரதான சுடரை இரண்டு மாவீரர்களின் தந்தையான திரு சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள் ஏற்றினார்.
அதன் பின்னர் தொடர்ந்து ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் உறவுகள், நண்பர்கள், மதகுருமார்கள், பிரதேசசபையின்உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்தனர்.
இதன் போது துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
சமநேரத்தில் கடலில் வீரகாவியமான வீரமறவர்களுக்கு சாட்டி கடலில் கப்பல் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த பீடத்தின் பிரதான சுடரை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றிவைக்க கடற்கரையில் அமைக்கப்பட்ட ஏனைய சுடர்களை மாவீரர்களின் உறவினர்கள் ஏற்றினார்கள்.
இங்கு ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து ஈகைச் சுடர்களை ஏற்றி நினைவேந்தல் செய்தனர்.