×

கிறிஸ்துவம்

கிறிஸ்தவ மதம் ஒரு கோட்பாடாக இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது, அவர் மேசியா, மீட்பர் மற்றும் பிதாவாகிய கடவுளின் மகன் என்று கருதப்படுகிறார். கிறிஸ்தவ போக்குகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

  • ரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லது கத்தோலிக்கம்; ஆர்த்தடாக்ஸ் சர்ச் அல்லது கிழக்கு சர்ச்; ஆங்கிலிகன் சர்ச் அல்லது ஆங்கிலிகனிசம்; புராட்டஸ்டன்ட்டுகள் அல்லது புராட்டஸ்டன்டிசம்:
  • லூத்தரன்ஸ், பிரஸ்பைடிரியன்ஸ், கால்வினிஸ்டுகள், இலவச சுவிசேஷகர்கள் மற்றும் பலர்.

கிறித்துவம் அதன் புனித புத்தகமாக பைபிளை வைத்திருக்கிறது,

இந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் உருவாக்கப்பட்டதன் பின்னணி

இயேசுவோடு இருந்த அவரது 12 சீடர்களில் ஒருவரான தோமா, இந்தியாவிற்கு வந்து, கிறிஸ்தவ மத பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், பல்வேறு பணிகள் ஆற்றியதாகவும், கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது…. தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்தவர், இயேசு கிறிஸ்துவை பற்றி எடுத்துக் கூறி, கிறிஸ்தவ ஆலயங்களை தோற்றுவித்துள்ளார்.

புனித தோமையார் என்று அழைக்கப்படும், St. Thomas, இயேசு தமது நற்செய்தி பணிக்காக தேர்ந்தெடுத்த பன்னிரு தூதர்களில் ஒருவர். ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ என மற்ற தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் ‘சந்தேக தோமா’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.

“நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்று இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள், மிகவும் புகழ் பெற்றவை. தூதரின் கல்லறைப் பீடத்தில் இந்த வார்த்தைகளே பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சூரில் உள்ள St. Thomas Syro-Malabar Catholic Church இன்று வரை கத்தோலிக்க தேவாலயமாக இருந்தாலும், இந்தியாவின் முதல் கிறிஸ்தவ ஆலயம் என்று அழைக்கப்படுகிறது… தோமா என்றும் தோமையார் என்றும் அழைக்கப்படும் இயேசுவின் சீடரால் கட்டப்பட்ட முதல் இந்திய கிறிஸ்தவ ஆலயம் இது…

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் பழையூரில் இந்த ஆலயம் உள்ளது. கேரளாவில் தோமையார் அமைத்த 7 ஆலயங்களில் இது, முதன்மையானது… துவக்கத்தில் இந்து மத கோவில்களில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டப பாணியில், இந்திய கட்டிடக்கலையின்படி, இந்த ஆலயம் கட்டப்பட்டிருந்தது. பின்னர், பழைய தேவாலயத்தை சுற்றி, புதிய தேவாலயம் அமைக்கப்பட்டது…

18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் படையெடுப்பு சமயத்தில் தேவாலயம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் கட்டப்பட்டது… இதன் மேற்கு மற்றும் கிழக்கு வாசல்களுக்கு அருகே இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் இங்கு, 2 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஜாதி, மத வேறுபாடின்றி இந்த திருவிழா நடத்தப்படுகிறது. பழையூர் மகா தீர்த்த தனம் எனும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்… அப்போது, வானவேடிக்கை, இசை திருவிழா என்று களை கட்டுகிறது…

இலங்கையில் கிறித்தவம்

இலங்கையில் கிறித்தவம் ஒரு சிறுபான்மைச் சமயமாகவுள்ளது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் கி.பி. 52இல் இந்தியாவுக்குக் கிறித்தவத்தை அறிமுகப்படுத்திய காலத்தில், இந்தியாவுக்கு அண்மையிலுள்ள இலங்கைக்கும் கிறித்தவம் அறிமுகமாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என்ற ஊகக் கருத்தும் உள்ளது. கிறித்தவ வியாபாரிகள் இலங்கையில் 6ஆம் நூற்றாண்டில் தங்கி, தேவாலயத்தினைக் கட்டி கிறித்தவ சமய விடங்களில் ஈடுபட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 1505 இல் போர்த்துக்கேயரால் உரோமன் கத்தோலிக்கம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்துக்காரரால் மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கிறித்தவர்கள் 10 வீதத்தினால் அதிகரித்தனர். இந்த எண்ணிக்கை பின்னர் குறைந்தது.

https://ta.m.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments