×

கலைமகள் அவர்கள் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராவதற்கு முன்னர் வன்னியில்

கலைமகள் அவர்கள் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராவதற்கு முன்னர் வன்னியில் ஒரு பகுதிக்கான அரசியல் பரப்புரைப் பொறுப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இணைந்த இவர் 1990 களில் மட்டக்களப்பு பகுதிகளில் போர்களில் ஈடுபட்டிருந்தார். பின்னர் வன்னியில் நடைபெற்ற ஒப்ரேஷன் ஜெயசிக;குறு நடவடிக்கையின் போது வயிற்றில் காயமடைந்து குழந்தைகளைத் தாங்கும் திறனை இழந்தார். சக போராளி ஒருவரைத் திருமணம் செய்த பின்னர், இவர்கள் ஒரு குழந்தையை தங்கள் மகளாகத் தத்தெடுத்தனர். இறுதிப்போர் நடைபெற்ற போது ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் ஆகியோரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டதோடு அவர்களை வழிநடத்தும் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அரசியல், இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்கள் அவரை ஒரு அசைக்க முடியாத போராளியாக இனம்காட்டியது. இதனால் அவர் கட்டாயமாக காணாமல் போனதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

( இவரது துணைவர் சுமன் மற்றும் மகள் தணிகா ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments